அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 297-303 இடங்களை பெற்று வெற்றிபெறும் என மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்!
மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியின் ஆட்சிகாலம் வரும் 2019-ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில் 17-வது லோக்சபா தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் (அ) மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக கட்சி 297-லிருந்து 303 இடங்களை பிடித்து அபார வெற்றி பெரும் என மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலானது சுமார் 5.4 லட்சம் மக்களின் கருத்துக்களை கொண்டு பெறப்பட்ட ஆய்வறிக்கையின் மூலம் கணிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கடந்த 2013-ஆம் ஆண்டு இதேப்போன்று நடத்தப்பட்ட ஆய்வில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டது, அதேப்போன் 2014-ஆம் ஆண்டு நடைப்பெற்ற பொதுத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சியை அமைத்தது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆய்வானது கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நடைப்பெற்றது என குறிப்பிட்ட அவர், வரும் தேர்தலில் பாஜக 297-லிருந்து 303 இடங்களை பிடித்து அபார வெற்றி பெறும் என்ற செய்தி தனக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த ஆய்வானது பாஜக சாராதா தனியார் நிறுவனம் மூலம் நடத்தப்பட்டது எனவும் இந்த அறிப்பின்போது குறிப்பிட்டுள்ளார். சுமார் 5.4 லட்சம் மக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் என்பது இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் இது பெரிய ஆய்வு என்பதை உணர்த்துகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.