மணிப்பூர் முதல்மந்திரியாக பிரேன் சிங் தேர்வு!!

உபி, உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் 3 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. 

Last Updated : Mar 14, 2017, 09:56 AM IST
மணிப்பூர் முதல்மந்திரியாக பிரேன் சிங் தேர்வு!! title=

இம்பால்: உபி, உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் 3 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. 

இந்நிலையில் மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். 

மணிப்பூரில் பிற கட்சிகளுடன் சேர்ந்து பாஜக ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. மணிப்பூரில் புதிய அரசு ஆட்சி அமைக்க வசதியாக அம்மாநில முதல் மந்திரியான ஒக்ராம் இபோபிசிங் பதவியை ராஜினாமா செய்ய அம்மாநில கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா வலியுறுத்தியிருந்தார். 

இதனைத்தொடர்ந்து, முதல்வர் பதவியை ஒக்ராம் இபோபிசிங் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை மணிப்பூர் ராஜ்பவனுக்கு இபோபிசிங் அனுப்பியுள்ளார். மேலும் மணிப்பூர் முதல்வர் பதவிக்கு பிரேன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பாஜக அறிவித்துள்ளது.

இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியமைக்க இருக்கும் பா.ஜ.க சார்பில் பிரேன் சிங் முதல்மந்திரியாக அக்கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர இருக்கிறார்.

Trending News