விசாகப்பட்டினத்தில் இருந்து ரயில் எண் 22415 என்ற சூப்பர்பாஸ்ட் ஏசி ஏபி எக்ஸ்பிரஸ் புது டெல்லி நோக்கி வந்துக்கொண்டிருந்தது. ஒரு இளம் பெண் போபாலில் இருந்து டெல்லிக்கு வருவதற்காக ரயிலில் ஏறியுள்ளார். அவர் 3-ம் வகுப்பு ஏ.சி. வகுப்பில் பயணித்து வந்தார். அப்பொழுது அதே வகுப்பில் பயணம் செய்த 5-6 பயணிகள் மது அருந்திவிட்டு, அந்த பெண்ணை சீண்டியுள்ளனர். இதுக்குறித்து அந்த பெண்ணின் சகோதரர் இரயில்வே அமைச்சருக்கு ட்வீட் செய்துள்ளார். ட்வீட் செய்த சிறிது நேரத்திலேயே உடனடியாக ரயில்வே போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதாவது இளம் பெண்ணின் சகோதரர் ரயில்வே அமைச்சருக்கு ட்வீட் செய்தார். அதில் "ஐயா, எங்களுக்கு உங்களின் உதவி தேவை, என் சகோதரி ரயில் எண் 22415 இல் பயணம் செய்கிறார். அந்த வகுப்பில் இருக்கும் ஆறு பேர் குடித்துவிட்டு, என் சகோதரியிடம் தவறாக நடக்க முயற்ச்சி செய்கிறார்கள். இதில் PNR எண்ணையும் பகிர்ந்துள்ளார்.
இந்த ட்வீட்க்கு பதிலளித்த SP GRP AGRA, உங்களுக்கு உதவ ஆக்ரா கேன்ட் ரயிலேவே போலீசுக்கு தகவல் அனுப்பட்டு உள்ளது. மேலும் 9454404418 என்ற உதவி எண்ணையும் பகிர்ந்துள்ளனர்.
ஆக்ரா கான்ட் ரயில் நிலையத்திற்கு வண்டி வந்ததும், ரயில்வே போலீசார் உடனடியாக செயல்படத் தொடங்கினார்கள். அந்த இளம் பெண்ணுக்கு தொந்தரவு அளித்த பயணிகளை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து ரயிலேவே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.