சர்ச்சை நாயகி ரெஹானா ஃபாத்திமாவிற்கு வந்த மற்றொரு சிக்கல்..!!!

ரெஹானா ஃபாத்திமா மீது POCSO வழக்கு போடப்பட்டதை அடுத்து, அலுவலக குடியிருப்பில் இருந்து வெளியேறுமாறு BSNL நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 30, 2020, 08:15 PM IST
  • சர்ச்சை நாயகி ரெஹானா ஃபாத்திமா மீது POCSO வழக்கு போடப்பட்டதை அடுத்து, BSNL அலுவலக குடியிருப்பில் இருந்து வெளியேறுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது
  • சபரிமலை கோயிலுக்குள் நுழைவதற்கான முயற்சித்ததால், ரெஹானா பாத்திமா சர்சையில் சிக்கினார்.
  • BSNL அவருக்கு கட்டாய ஓய்வு கொடுத்துள்ளது.
சர்ச்சை நாயகி ரெஹானா ஃபாத்திமாவிற்கு வந்த மற்றொரு சிக்கல்..!!! title=

சர்ச்சை நாயகி ரெஹானா ஃபாத்திமா மீது POCSO வழக்கு போடப்பட்டதை அடுத்து, பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) ரெஹானா பாத்திமாவிடம், அவரது அலுவலக குடியிருப்பில் இருந்து வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரெஹானா ஃபாத்திமாவின் (Rehana Fathima) மைனர் குழந்தைகள், அவரது அரை நிர்வாண உடலில் மீது ஓவியம் தீட்டும் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டதற்காக, அவர் மீது  POCSO வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பிஎஸ்என்எல்(BSNL), ஜூன் 27 அன்று வெளியிட்ட நோட்டீஸில், போக்ஸோ வழக்கு பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது என்றும் அதனால், இன்னும் 30 நாட்களுக்குள் அவர் தனது அலுவலக குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என கூறியுள்ளது. அவ்வாறு செய்யவில்லை என்றால், கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ |  விண்வெளி வீரர்கள் சந்திக்கும் கழிப்பறை பிரச்சனையை தீர்க்க NASA முயற்சி...!!!

பாத்திமாவுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மே 11 முதல், அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதாகவும், எனவே அவர் இனி பிஎஸ்என்எல் ஊழியர் அல்ல என்றும் அலுவலக குடியிருப்பில் வசிக்க தகுதியற்றவர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. சர்ச்சைகுரிய இந்த வீடியோ தொடர்பாக,  வழக்கறிஞர் ஏ.வி.அருண் பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில் பாத்திமா மீது திருவல்லா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

சிறார் நீதிச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ரெஹானா ஃபாத்திமா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளன. BSNL நிறுவனத்தில் பணிபுரிந்த ஃபாத்திமா, மத உணர்வுகளை புண்படுத்தியதாக மக்கள் பெருமளவில் புகார் அளித்ததால், கட்டாயமாக ஓய்வு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மதம் மற்றும் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்று ரெஹானா ஃபாத்திமா கூறியுள்ளார்.

ALSO READ | தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்த காங்கிரஸ்... லடாக் கவுன்சிலர் அதிர்ச்சி தகவல்...!!!

 

இதற்கிடையில், ரெஹானா ஃபாத்திமா முன் ஜாமீன் வழங்க கோரி கேரள உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். சபரிமலை கோயிலுக்குள் நுழைவதற்கான முயற்சித்ததால், சர்சையில் சிக்கிய ரெஹானா பாத்திமா, தனது அரை நிர்வாண உடலில், அவரது மைனர் மகனும் மகளும் பெயிண்ட் செய்யும் வீடியோவை அவர் தனது பேஸ்புக்கிலும், தனது யூடியூப் சேனலிலும் பகிர்ந்து கொண்டார். அது மிகவும் வைரலாகியது.

Trending News