விசாகப்பட்டினம்: முதலமைச்சராக இருந்தேன் என்ற முறையில் எனக்கு நிறைய அனுபவங்கள் உள்ளன. பிரதமராகும் தகுதி எனக்கு உண்டு என மாயாவதி தெரிவித்துள்ளார்.
இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற செய்தியாளர்களை சந்திபில் பகுஜன் சமாஜ் பார்ட்டியின் தலைவர் மாயாவதி மற்றும் ஜன சேன கட்சியின் தலைவர் பவன் கல்யாண் இருவரும் சேர்ந்து கூட்டாக பேசினார்கள.
அப்பொழுது பேசிய மாயாவதி, வரும் மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் மத்தியில் பிரதமராக பொறுப்பேற்க்க தயாராக உள்ளேன். உத்தரபிரதேச மாநிலத்தில் நான்கு முறை முதலமைச்சராக இருந்துள்ளதால், அதன் மூலம் நிறைய அனுபவங்கள் கிடைத்துள்ளது. அதை பயன்படுத்தி மத்தியில் சிறந்த ஆட்சியை தருவேன். எனக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. மக்களின் நலனுக்காக இந்த அனுபவத்தை மத்தியில் நான் பயன்படுத்துவேன் என கூறினார்.
நீங்கள் பிரதமர் ஆகா ஆசைப்படுகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பொதுத் தேர்தலின் முடிவுகள் மே 23 ஆம் தேதி வெளியாகும், அன்று இந்த கேள்விக்கான விடை தெளிவாக தெரிந்துவிடும் என்றுக் கூறினார்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. இங்கு 25 மக்களவை தொகுதியும், 175 சட்டமன்ற தொகுதியும் உள்ளது. இங்கு பி.எஸ்.பி, ஜன சேன, சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.
பகுஜன் சமாஜ் கட்சி மூன்று மக்களவை தொகுதியிலும், 21 சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடுகிறது என்பது குரிப்பிடதக்கது.