புதுடெல்லி: ஜம்முவில் இன்று காலை நிகழ்ந்த பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர், 55க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். கத்ராவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து பாலத்தில் இருந்து தவறி விழுந்த விபத்தில், இந்த சோக சம்பவம் நடைபெற்றதாக ANI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று, (2023, மே 30) செவ்வாய்கிழமை காலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.
யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து கத்ராவுக்குச் சென்று கொண்டிருந்தது. பேருந்தில், மாதா வைஷ்ணோ தேவி அலயத்திற்குக் செல்வதற்காக வந்த யாத்ரீகர்கள் இருந்தனர். ஜம்மு மாவட்டத்தில் உள்ள கத்ராவில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள ஜஜ்ஜர் கோட்லி அருகே இந்த கோர விபத்து நடந்துள்ளது.
#WATCH | Bus accident in Jammu | 10 people died and around 55 are injured. All have been evacuated. Rescue operation is almost complete. SDRF team is also present on the spot. The bus was carrying more passengers than the prescribed limit and will be probed during the probe: SSP… pic.twitter.com/z1RiZTzkwn
— ANI (@ANI) May 30, 2023
உலகப் புகழ்பெற்ற மாதா வைஷ்ணவ் தேவிக் கோவில் திரிகூட மலையின் உச்சியில் அமைந்துள்ளது, இந்தக் கோவிலுக்கு செல்வதற்கு, திரிகூட மலையின் அடிவாரத்தில் உள்ள கத்ரா நகரம் அடிப்படை முகாமாகும்.
ஜம்மு காஷ்மீரின் கத்ராவை நோக்கி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து சென்றுக் கொண்டிருந்த பேருந்து, வழிமாறி சென்று இந்த விபத்தில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
மேலும் படிக்க | ISRO: விண்ணில் சீறிப் பாய்ந்தது GSLV-F12 ராக்கெட்!
ஜம்முவின் ஜஜ்ஜார் கோட்லியில் பேருந்து விபத்தில் உயிரிழந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், குடும்பத்தினரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
Bihar CM Nitish Kumar expresses condolences over the death of Bihar natives in the bus accident in Jhajjar Kotli, Jammu and announces an ex-gratia grant of Rs.2 lakh each to the next of kin. pic.twitter.com/J4cYGfFT4D
— ANI (@ANI) May 30, 2023
பேருந்து விபத்து நிகழ்ந்ததும், அந்த இடத்திற்கு வந்த அப்பகுதி மக்கள் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகள் பயணித்ததாகவும் கூறப்படுகிறது. காவல்துறை விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்திவருகிறது.
"அமிர்தசரஸில் இருந்து கத்ராவிற்கு, மாதா வைஷ்ணோ தேவியை நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது, ஜஜ்ஜார் கோட்லி பாலத்தில் கவிழ்ந்தது. சுமார் 10 பேர் இறந்தனர் மற்றும் சுமார் 55 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். துணை ராணுவக் குழுக்கள் மற்றும் SDRF அணிகள் காவல்துறைக்கு உதவுகிறார்கள். உள்ளூர் மக்களும் உதவுகிறார்கள், இதனால் மக்களை வெளியேற்றவும் மீட்கவும் முடிந்தது" என்று ஜம்மு எஸ்எஸ்பி சந்தன் கோஹ்லி தெரிவித்தார்.
மே 21 அன்று ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் மாதா வைஷ்ணோ தேவி யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ராஜஸ்தான் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 24 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, கோடை விடுமுறை, பள்ளிகளுக்கு விடுமுறை, தேர்வு முடிவுகளுக்குப் பிறகு வேண்டுதலை நிறைவேற்ற என மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் செல்வது வழக்கம்.
மேலும் படிக்க | 7th Pay Commission: மே 31 டிஏ ஹைக் பற்றிய முக்கிய அறிவிப்பு... விரைவில் சம்பள உயர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ