தமிழில் எங்கேயும் எப்போதும், காதல்னா சும்மா இல்ல, கணம் போன்ற தமிழ் படங்களில் நடித்த பிரபல நடிகர். 96 படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் ராம் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கும், ரக்ஷித்தா ரெட்டி என்பவருக்கும் அடுத்த மாதம் 3ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.
சர்வானந்திற்கு விபத்து:
நடிகர் சர்வானந்த் தற்போது ஹைதராபாத்தில் உள்ளார். இவர், இன்று காலை ஐதராபாத்தில் உள்ள ஃபிலிம் நகர் சந்திப்பு பகுதியில் காரை ஓட்டிக்கொண்டு வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இவரது கார் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | ‘படங்களில் நடிக்க விருப்பமில்லை..’ சினிமாவில் இருந்து ப்ரேக் எடுக்கும் அனுஷ்கா..?
பயங்கர விபத்தா?
கார் விபத்தில் சிக்கிய சர்வானந்தை அருகில் இருந்தவர்கள் உடனே மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக சர்வானந்திற்கு பெரிய அடி ஏதும் படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இறுப்பினும் தற்போது இந்த விபத்து குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதில் கார் ஓட்டிக்கொண்டிருந்த சர்வானந்த், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்ப முயன்றதால் கார், டிவைடரில் மோதியதாக கூறப்பட்டுள்ளது. இந்த விபத்து போலீஸ் விசாரணைக்கும் உள்ளாக்கப்படும் என தெரிகிறது. இதுக்குறிதது சர்வானந்த் தரப்பில் இருந்து இன்னும் எதுவும் கூறப்படவில்லை. சர்வானந்தின் விபத்து செய்தி கேட்டவுடன் அவரது ரசிகர்களும் டோலிவுட் பிரபலங்களும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
அடுத்த மாதம் திருமணம்:
நடிகர் சர்வானந்த், தனது காதலியும் சாஃப்வேர் இன்ஜினியரும் ஆன, ரக்ஷித்தா ரெட்டி என்பவரை அடுத்த மாதம் 3 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இதில் நாகார்ஜுன், அமலா, ராம் சரண், சித்தார்த், அதிதி, அகில் அக்கினேனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினர். சர்வானந்த்-ரக்ஷித்தாவிற்கு ஜெய்பூரில் திருமணம் நடைபெற உள்ளது.
பல படங்களில் சர்வானந்த்:
பெங்களூருவில் பிறந்து வளர்நதுள்ள சர்வானந்த், நடிகர்கள் ராம் சரண் மற்றும் ராணா டகுப்டியுடன் ஒரே வகுப்பில் படித்தவர். தமிழ் திரையுலகில் சில ரசிகர்களுக்கு மட்டுமே இவரை தெரிந்திருந்தாலும், தெலுங்கில் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக தமிழ் மற்றும் தெலுங்கில் இவரது கணம் என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இதையடுத்து ஸ்ரீராம் ஆதித்தயாவுடன் ஒரு படத்தில் இணைகிறார், ஷர்வானந்த். இதில் இவருக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார். இந்த படம் மட்டுமன்றி வேறு சில படங்களிலும் சர்வானந்த் கமிட் ஆகியுள்ளார். பிசியாக படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவருக்கு இப்போது விபத்து ஏற்பட்டுள்ளது பலருக்கும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.
மேலும் படிக்க | வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற உலக நாயகன்...பாலிவுட் பிரபலத்துடன் குட்டி க்ளிக்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ