ஏழுமலையானுக்கு ₹1 கோடி மதிப்பிலான வாளை காணிக்கையாகிய தொழிலதிபர்

திருப்பதி ஏழுமலையானின் பக்தரான ஒரு தொழிலதிபர், திருப்பதி ஏழுமலையானுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான ‘சூர்யகதாரி' என்ற வாளை காணிக்கையாக வழங்கினார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 20, 2021, 04:49 PM IST
  • விலையுயர்ந்த தங்க வாள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தப்படுவது இது முதல் முறை அல்ல.
  • 2018 ஆம் ஆண்டில், தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பக்தர், தங்க வாளை காணிக்கையாக வழங்கியிருந்தார்.
  • வாள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த நகைக்கடைக்காரர்களால் சிறப்பாக தயாரிக்கப்பட்டது
ஏழுமலையானுக்கு ₹1 கோடி மதிப்பிலான வாளை காணிக்கையாகிய தொழிலதிபர் title=

திருப்பதி: ஹைதராபாத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர்  திருமலை திருப்பதியில் (TTD) வீற்றிருக்கும் வெங்கடேச பெருமாளுக்கு, சுமார் 5 கிலோ எடையுள்ள வாள் ஒன்றை திங்கள்கிழமை அன்று, காணிக்கையாக வழங்கியதாக கோயிலின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திருப்பதி ஏழுமலையானின் பக்தரான ஒரு தொழிலதிபர், திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பிறகு, பெருமாளுக்கு ‘சூர்யகதாரி' என்ற வாளை காணிக்கையாக வழங்கினார்.

திருப்பதி (Tirupati) கோவிலில் உள்ள ரங்கநாயக்குலா மண்டபத்தில் கூடுதல் ஈ.ஓ ஏ. வி.தர்ம ரெட்டியிடம் இந்த காணிக்கை ஒப்படைக்கப்பட்டது. இரண்டு கிலோ தங்கம் மற்றும் மூன்று கிலோ வெள்ளியினால், இந்த வாளின் மதிப்பு ஒரு கோடி ரூபாஉ என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வாள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த நகைக்கடைக்காரர்களால் சிறப்பாக தயாரிக்கப்பட்டது, மேலும் இத தயாரிக்க ஆறு மாதங்கள் ஆனது.

ALSO READ | காவாளம்: திருப்பதி உண்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்

இது போன்ற விலையுயர்ந்த தங்க வாள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தப்படுவது இது முதல் முறை அல்ல. 2018 ஆம் ஆண்டில், ஒரு பிரபல ஜவுளி வர்த்தகர் மற்றும் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பக்தர், தங்க வாளை காணிக்கையாக வழங்கியிருந்தார். அந்த தங்க வாள் ஆறு கிலோ தங்கம் கொண்டதாக கூறப்படுகிறது, இதன் மதிப்பு ₹1.75 கோடி.

சூர்யகதாரி  என்பது திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி வைத்திருக்கும் ஆயுதங்களில் ஒன்று என வேதங்களில் கூறப்பட்டுள்ளது.  சூர்யா கதாரி என்ற சொல் சூர்ய (சூரியன்) + கதாரி (வாள்) என்று பொருள்படும். விஷ்ணுவின் வாளான இது ‘நந்தகா’ என்று அழைக்கப்படுகிறது, மேலும் இந்த வாள் சூரிய கடவுளால் பரிசளிக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

ALSO READ | TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் ட்விட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News