பெண்களின் திருமண வயதில் மாற்றம்! அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் சட்டம் விரைவில்

இந்தியாவில் 18 முதல் 21 வயதுக்குள் திருமணம் செய்யப்படும் பெண்களின் எண்ணிக்கை சுமார் 16 கோடி

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 16, 2021, 12:02 PM IST
  • பெண்களின் திருமண வயதில் விரைவில் மாற்றம்!
  • அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் சட்டம் அதிவிரைவில்
  • திருமண தடுப்பு சட்டத்தில் கூடுதல் விதிகள் சேரும்
பெண்களின் திருமண வயதில் மாற்றம்! அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் சட்டம் விரைவில் title=

புதுடெல்லி: நாட்டில் முக்கிய சீர்திருத்தங்கள் தொடர்பான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் முதல் பெரிய முன்னேற்றம் பெண்களின் திருமண வயது தொடர்பானது. 

பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் திருமணம் தொடர்பான இரண்டாவது பெரிய  முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் சட்டமாக உருவெடுக்கும். 

இதற்கு முன்னதாக, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (Non Resident Indian (NRI)) திருமணங்களை 30 நாட்களுக்குள் பதிவு செய்வது தொடர்பாக அமைச்சரவை பெரிய முடிவை எடுத்துள்ளது. 

இந்தியாவில் 18 முதல் 21 வயதுக்குள் திருமணம் செய்யப்படும் பெண்களின் எண்ணிக்கை சுமார் 16 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 

2006ஆம் ஆண்டின் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின்படி, குறைந்தபட்ச வயதுக்கு கீழ் உள்ள ஆண் அல்லது ஒரு பெண்ணை திருமணம் செய்து வைப்பவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

marriage

ஆண் மற்றும் பெண் என இரு பாலர்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 21 வயதாக மாற்றும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சட்டம் அமலுக்கு வந்தால், அனைத்து மதங்களை சேர்ந்த பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதில் மாற்றம் ஏற்படும்.  

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது (Minimum Age of Girls for Marriage) தொடர்பாக ஆய்வு செய்ய பணிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. ஜெயா ஜேட்லி தலைமையில் பத்து உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.அந்தக் குழு, கடந்த ஆண்டு டிசம்பரில் நிதி ஆயோக்கிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. 

ALSO READ | திருமண பரிசாக மகளுக்கு மகளிர் விடுதியை கட்டி கொடுத்த தந்தை!

இந்த பணிக்குழு பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கான திட்டத்தை சமர்ப்பித்தது. நாட்டின் அனைத்துப் பிரிவினருக்கும், மதங்களுக்கு இந்த குறைந்தபட்ச திருமண வயது என்பது பொருந்துவதுபோல நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பணிக்குழு தனது வலுவான பரிந்துரையை சமர்ப்பித்தது.

நாடு முழுவதும் உள்ள பிரபல அறிஞர்கள், சட்ட வல்லுநர்கள், சிவில் சமூக அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்திய 10 பேர் கொண்ட பணிக்குழு, வெபினார் மூலம் நாட்டிலுள்ள பெண் பிரதிநிதிகளுடன் நேரடியாக உரையாடி இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.
பெண் கல்வி மற்றும் பெண்கள் வேலைக்கு போவது ஆகியவற்றை பெரிதும் ஊக்குவிக்காத, சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் இந்த முடிவு குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

READ ALSO | ஆண்களின் திருமண வயது 18-ஆக குறைக்க கோரிய மனு தள்ளுபடி

இந்தியாவில் ஆண்டுதோறும் 18 வயதுக்குட்பட்ட 1.5 மில்லியன் பெண்களுக்கு திருமணம் நடப்பதாக யுனிசெஃப் தெரிவிக்கிறது.
இந்தியாவின் சார்தா சட்டத்தின்படி, ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 என்றும் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 14 என்றும் 1929ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது.

1978ல் சார்தா திருத்தப்பட்டு, ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 என்றும் பெண்களுக்கு 18 என்றும் மாற்றப்பட்டது.

2006ஆம் ஆண்டில் குழந்தை திருமண தடுப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டபோது, 1978ஆம் ஆண்டின் விதிகளோடு மேலும் சில புதிய விதிகள் சேர்க்கப்பட்டன.

திருமண வயதை 21 வயதாகவே வைத்திருக்கும் வகையில் 4 சட்டங்களில் திருத்தம் செய்ய பணிக்குழு பரிந்துரை செய்துள்ளது.இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் 18 முதல் 21 வயதுக்குட்பட்ட பெண்களின் எண்ணிக்கை சுமார் 160 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.

READ ALSO | பொம்மையை காதலித்து திருமணம் செய்துகொண்டவர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News