#Cauvery issue: 3 மாதம் அவகாசம் கேட்கும் மத்திய அரசு!

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் 3 மாதம் அவகாசம் கேட்க்கும் மத்திய அரசு!

Last Updated : Mar 31, 2018, 10:49 AM IST
#Cauvery issue: 3 மாதம் அவகாசம் கேட்கும் மத்திய அரசு! title=

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் விளக்கம் கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சற்று நேரத்தில் மனுத்தாகள் செகிறது! 

காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் போட்டது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. 

அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது. காவிரி வாரியம் அமைக்க 6-வார கேடு முடிவடைந்தது. 

காவிரி விவகாரம் தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்றால் என்ன என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் கோரி மனுத்தாக்கல் செய்கிறது. இதை தொடர்ந்து, உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான 16.2.2018-ல் இருந்து 3 மாதம் அவகாசம் கோரி மனுதாக்கல் செய்தது மத்திய அரசு. 

Trending News