சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று நண்பகல் 12 மணியளவில் வெளியாகின்றன.
கடந்த மார்ச் மாதம் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றன. நாடு முழுவதும் 10,678 பள்ளிகளைச் சேர்ந்த 10 லட்சத்து 98 ஆயிரத்து 891 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் 6,28,865 பேர் மாணவர்கள், 4,70,026 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஎஸ்இ +2 பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, சிபிஎஸ்இ சம்மதம் தெரிவித்தது. ஆனால் திடீரென சிபிஎஸ்இ இதற்க்கு தடை விதித்தது.
இதையடுத்து மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளிக்காமல், தேர்வு முடிவுகள் வெளியிட முடிவு செய்யப்பட்டது. கடந்த 24-ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், டெல்லி ஐகோர்ட்டின் கருணை மதிப்பெண் முறையை திடீரென ரத்து செய்யக் கூடாது என்ற உத்தரவால் முடிவுகள் தள்ளிப் போனது.
இதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.
இன்று நண்பகல் 12 மணியளவில் வெளியிடப்படும் தேர்வு முடிவுகளை,
என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.