காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை அமைத்தது மத்திய அரசு!

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 9 பேர் கொண்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது!

Last Updated : Jun 22, 2018, 07:32 PM IST
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை அமைத்தது மத்திய அரசு! title=

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 9 பேர் கொண்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது!

கர்நாடகா மாநிலத்தை தவிர மற்று உறுப்பினர்கள் இடம்பெற 9 உறுப்பினர்களை கொண்ட குழுவினை மத்திய அரசு அமைத்துள்ளது. கர்நாடகாவை தலைமையிடமாக கொண்டு இந்த குழு இயங்கும் எனவும் தெரவித்துள்ளது.

மத்திய நீர்வளத்துறை தலைவர் மசூத் ஹுசைன் அவர்கள் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவராக செயல்படுவார்.

தமிழகம் சார்பிலான உறுப்பினராக SK பிராபகர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். கேரளாவின் உறுப்பினராக தின்கு பிஷ்வால், புதுவை உறுப்பினராக A அன்பரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவின் சார்பில் உறுப்பினர் பரிந்துரைக்கப்படவில்லை.

#Cauvery...

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன்னதாக மத்திய அரசு இது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 1-ம் தேதி இது குறித்து அறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து தமிழக அரசின் அதிகாரிகளாக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் மாநில நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் செந்தில்குமார் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்தது. காவிரி ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமிக்கப்பட்டார்.

எனினும் கர்நாடகா சார்பில் அதிகாரிகளின் பெயர்களை மாநில அரசு அறிவிக்கவில்லை, மாறாக நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் HD குமாரசாமி குற்றம் சாட்டினார்.

Trending News