அப்பட்டமான பொய்.... ஜாக் டோர்சிக்கு பதிலடி கொடுத்த மத்திய இணை அமைச்சர்!

மத்திய தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ' டிவிட்டர் தொடர்ந்து சட்டத்தை மீறிய போதும், எவரும் சிறைக்கு செல்லவும் இல்லை, ட்விட்டரை முடக்கவும் இல்லை' என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 13, 2023, 10:41 AM IST
  • முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி யூடியூப் சேனலான பிரேக்கிங் பாயிண்ட்ஸுக்கு அளித்த பேட்டி.
  • ட்விட்டர் 'ரெய்டு' விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் விமர்சனம்.
அப்பட்டமான பொய்.... ஜாக் டோர்சிக்கு பதிலடி கொடுத்த மத்திய இணை அமைச்சர்! title=

புதுடெல்லி: முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, டிவிட்டர் நிறுவனத்தின் மீது இந்தியா அழுத்தம் கொடுத்ததாகக் கூறிய நிலையில், மத்திய அரசு மிகவும் கடுமையாக பதிலளித்துள்ளது. விவசாயிகளின் போராட்டத்தின் போது சில கணக்குகளை முடக்க மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் இந்திய அரசு அதிக அழுத்தம் கொடுத்ததாக ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சியின் குற்றச்சாட்டுகளுக்கு, மத்திய அரசு "அப்பட்டமான பொய்" என்று கடுமையாக பதிலளித்துள்ளது. 'எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ' டிவிட்டர் தொடர்ந்து சட்டத்தை மீறிய போதும், எவரும் சிறைக்கு செல்லவும் இல்லை, ட்விட்டர் முடக்கமும் இல்லை' என்று கூறியுள்ள மத்திய அமைச்சர், டோர்சியின் கீழ் ட்விட்டர் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது, இந்திய சட்டத்தின் இறையாண்மையை ஏற்றுக்கொள்வதில் அவர்களுக்கு பிரச்சனை இருந்ததாக குறிப்பிட்டார். மேலும் ட்விட்டர் வரலாற்றின் மிகவும் சந்தேகத்திற்குரிய காலகட்டத்தை மூடி மறைப்பதற்கான முயற்சி என்று அமைச்சர் தனது ட்வீட்டில் கூறினார்.

ராஜீவ் சந்திரசேகர் ட்விட்டர் பற்றிய சில 'உண்மைகள் மற்றும் உண்மைகளை' சுட்டிக்காட்டினார், "டோர்சி மற்றும் அவரது குழுவின் கீழ் ட்விட்டர் இந்திய சட்டத்தை தொடர்ந்து மீறியது. உண்மையில், அவர்கள் தொடர்ந்து சட்டத்திற்கு இணங்கவில்லை. 2020 முதல் 2022 வரை அவர்கள் இறுதியாக இணங்கியது ஜூன் 2022 தான். ஆனால் யாரும் சிறைக்குச் செல்லவில்லை அல்லது ட்விட்டர் "முடக்கப்படவில்லை" என்றார்.

இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் கொடுத்தது: ஜாக் டோர்சி 

முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, டிவிட்டர் நிறுவனத்தின் மீது இந்தியா அழுத்தம் கொடுத்ததாகவும், நிறுவனத்தை மூட வைப்பது மற்றும் ஊழியர்களின் வீடுகளில் சோதனை நடத்துவது உட்பட பல வகைகளில் நெருக்குதல் அளித்ததாகவும் கூறினார். திங்களன்று பிற்பகுதியில் யூடியூப் சேனலான பிரேக்கிங் பாயிண்ட்ஸுக்கு அளித்த பேட்டியின் போது, 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விவசாயிகள் போராட்டங்களின் போது கணக்குகளை முடக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு ட்விட்டர் இணங்க மறுத்ததால் அச்சுறுத்தல்கள் வந்ததாக டோர்சி கூறினார்.

மேலும் படிக்க | பிபார்ஜாய் புயல் வரும் 15ஆம் தேதி கரையைக் கடக்கும்

இந்தியாவில் ட்விட்டரை மூடுவோம் என அச்சுறுத்தல்

"விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, அரசாங்கத்தை விமர்சிக்கும் குறிப்பிட்ட பத்திரிகையாளர்களின் கணக்குக்ளை முடக்குமாறு எங்களிடம் பல கோரிக்கைகளைக் வைத்த ஒரு நாடு இந்தியா, மேலும் இது மிகப் பெரிய சந்தையாக விளங்கும் இந்தியாவில் ட்விட்டரை மூடுவோம் எனவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என டோர்சி மேலும் கூறினார்.

ட்விட்டர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு

2021-ம் ஆண்டு டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது ஏராளமான கணக்குகளை முற்றிலுமாக முடக்குமாறு ட்விட்டர் கேட்டுக் கொள்ளப்பட்டதாக கடந்த ஆண்டு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ட்விட்டர் தெரிவித்தது. ட்விட்டர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசின் உத்தரவு, அரசியலமைப்பின் கீழ் பயனர்களின் உரிமைகளை மீறுகிறது. அரசின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது என்றும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69 ஏ பிரிவுக்கு எதிரானது என்றும் மனுவில் விவரிக்கப்பட்டது.

மத்திய அரசு அளித்த பதில் மனு

இதற்கு பதிலளித்த மத்திய அரசு, தேசிய மற்றும் பொது நலன் கருதி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கொலை மற்றும் கும்பல் வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ட்விட்டர் 'ரெய்டு' விவகாரத்தில் மத்திய அரசை விமர்சிக்கும் காங்கிரஸ்

இதற்கிடையில், முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சியின் கருத்துக்கள் தொடர்பாக மத்திய பாஜக தலைமையிலான என்டிஏ அரசாங்கத்த விமர்சனம் செய்தது, டிவிட்டர் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்தது மற்றும் நரேந்திர மோடி அரசாங்கம் பதிலளிக்குமா என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் படிக்க | இவ்வளவு கம்மி விலையில் ஏசியா? விலையை கேட்டால் உடனே வாங்கிடுவீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News