அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இந்திய அமெரிக்கர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “இந்த ஆண்டு நாம் சுதந்திரமடைந்து 75-வது ஆண்டைக் கொண்டாடுகிறோம், 72-வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம். ஆனால் இப்போதும் ஒவ்வொரு அமைப்புக்கும் அரசியலமைப்பு வழங்கியுள்ள பொறுப்புகளை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஜனநாயகம் என்பது அனைவரும் பங்கேற்பது. நீதித்துறை குறித்து சில அரசியல் கட்சிகள் கொண்டுள்ள தவறான கருத்துகளைக் கொண்டுள்ளன.
மேலும் படிக்க | நுபூர் சர்மாவை சரமாரியாக விளாசிய உச்சநீதிமன்றம்
ஆளுங்கட்சிகள் தங்களுக்கு ஆதரவாக நீதித்துறை செயல்பட வேண்டுமென எண்ணுகின்றன. எதிர்க்கட்சிகள் தங்களது நிலைப்பாடுகளை நீதித்துறை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென எண்ணுகின்றன. ஆனால், நீதித்துறை என்பது சட்டத்திற்கு மட்டுமே கட்டுப்படும்.
நம்மைப் பிரிக்கும் அற்ப விஷயங்களில் கவனம் செலுத்துவதை விடுத்து ஒன்றிணைக்கும் விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். நுபுர் சர்மாவின் வார்த்தைகளால் ஒட்டு மொத்த நாடே தீக்கிரையாகி விட்டதாகவும், அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அண்மையில் கருத்து தெரிவித்த நிலையில், தலைமை நீதிபதியின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | இஸ்லாமியர்கள் போராட்டம்... வீடுகளை இடித்த யோகி ஆதித்யநாத் அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR