குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்றுக்கொண்ட திரௌபதி முர்முவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 25, 2022, 03:52 PM IST
  • குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றார்
  • அவர் இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவர்
  • அவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
 குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து title=

திரௌபதி முர்மு இன்று (ஜூலை 25, 2022) இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராகப் பதவியேற்று, நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் பழங்குடியினப் பெண்மணி ஆனார். இந்திய குடியரசுத் தலைவரும் நாட்டின் முதல் குடிமகளுமாக பதவியேற்றிருக்கும் திரெளபதி முர்மு நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவி பிரமாணம் செய்துவைத்தார். 

மேலும் படிக்க | மாநிலங்களவை எம்பியாக பதவியேற்றார் இளையராஜா

பதவியேற்பு விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். குடியரசுத் தலைவராக பதவியேற்றதை அடுத்து திரௌபதிக்கு இந்தியா முதல் சர்வதேச தலைவர்கள்வரை வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Draupathi Murmu

அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியக் குடியரசுத் தலைவராகத் பொறுப்பேற்கவுள்ள தங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது ஜனநாயக கொள்கையின் மீது நாட்டின் நம்பிக்கையும், பலத்தையும் வெளிப்படுத்துகிறது.

 

இந்தியக் குடியரசுத் தலைவராக உங்கள் சேவைகளால் நாடு பயனடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னதாக, ஜூலை 18ஆம் தேதியன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது போட்டியாளரான யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்திருந்தார்.

மேலும் படிக்க | இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரௌபதி முர்மு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News