லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின்னர் பெரிய நடவடிக்கை எடுத்த பிரியங்கா காந்தி

உத்தரபிரதேசமாநிலத்தில் அனைத்து மாவட்ட தேர்தல் குழுக்களை கலைத்த காங்கிரஸ் கட்சி.

Written by - ZEE Bureau | Last Updated : Jun 24, 2019, 05:13 PM IST
லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின்னர் பெரிய நடவடிக்கை எடுத்த பிரியங்கா காந்தி

லக்னோ: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரபிரதேசத்தில் ஒரு பெரிய மறுசீரமைப்பை மேற்கொண்டுள்ளார். ​​அங்குள்ள அனைத்து மாவட்டக் குழுக்களையும் கலைத்துவிட்டார், அதாவது அனைத்து மாவட்டத் தலைவர்கள், நகரத் தலைவர்கள் மற்றும் அனைத்து அலுவலர்களும் தங்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

உத்தரபிரதேசத்தில் நடைபெறவிருக்கும் 10-க்கு மேற்ப்பட்ட சட்டசபை இடைத்தேர்தலை கவனித்துக்கொள்ள இரு தலைவர்கள் கொண்ட குழு அமைத்து அவர்களை பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த இரு தலைவர்களும் தேர்தல் குறித்து அனைத்து பணிகளையும் பார்த்துக்கொள்வார்கள். இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியை தயார் செய்ய வேண்டும் என்று பிரியங்கா காந்தி, இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். 

கடந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக வேலை பார்த்தவர்களை கண்டறியவும், தேர்தலில் தோல்வி ஏற்ப்பட யார் காரணம் என்பதை அறியவும் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தங்கள் அறிக்கையை நேரடியாக  பிரியங்கா காந்திக்கு அனுப்பும். அந்த அறிக்கையின் அடிப்படையில், கட்சிக்கு எதிராக செயல்பட்ட தலைவர்கள் மீது கட்சி மேலிடம் கடும் நடவடிக்கை எடுக்கும். உ.பி. மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் அஜய் குமார் லல்லு, உ.பி. கிழக்கு அமைப்பின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து, பிரியங்கா காந்தி வாத்ரா கோரக்பூர் பிரிவின் ஒரு மாவட்டத்திற்கு பெயரிட்டு, அங்கேயும் கூறினார். 

பல இடங்களில் கட்சியின் நிர்வாகிகள் தங்கள் விருப்பம் போல செயல்படுவதாகவும், கட்சியின் மேலிடத்தில் எந்தவித ஆலோசனை செய்யாமல் அவர்களாகவே முடிவுகள் எடுப்பதாகவும் என காங்கிரஸ் கட்சியின் பல நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விஷயங்களைப் பற்றி பிரியங்கா மிகவும் வருத்தப்பட்டார். இதனால் தான் பல அதிரடி முடிவுகளை பிரியங்கா காந்தி எடுத்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. 

தனக்கு மிகவும் நெருக்கமான தலைவர்களான பாஜி ராவ் காதே, சுபைர் கான் மற்றும் சச்சின் நாயக் ஆகியோரிடம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்படுவோரை பற்றி அடிமட்டத்தில் இருந்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற பொறுப்பை ஒப்படைத்துள்ளார். 

More Stories

Trending News