சட்டமன்ற கட்சி கூட்டத்திற்கு முன்பு மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்த சித்தராமையா! வலுக்கும் ஊகங்கள்!

 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 14, 2023, 02:37 PM IST
  • டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா இருவரின் ஆதரவாளர்களும் தங்கள் தலைவர்களை முதல்வராக்க வேண்டும் என்று கோரிக்கை.
  • காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, ஏழு கோடி கன்னடர்களின் வெற்றி: சித்தராமையா
  • அரசாங்கத்தில் 2 முதல் 3 துணை முதல்வர்களை கட்சி தேர்ந்தெடுக்கலாம்.
சட்டமன்ற கட்சி கூட்டத்திற்கு முன்பு மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்த  சித்தராமையா! வலுக்கும் ஊகங்கள்! title=

 

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றூ அருதி பெரும்பான்மையைப் பெற்ற பிறகு, காங்கிரஸ் இப்போது கர்நாடகாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றக் கட்சியின் முக்கியமான கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கூட்டுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு அக்கட்சியின் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது என்றார். இந்நிலையில், இந்த முக்கிய கூட்டத்திற்கு முன்னதாக சித்தராமையா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை சந்தித்துள்ளார். அவர் முதலமைச்சராக வருவாரா, டி.கே.சிவக்குமார் ஓரங்கட்டப்படுவாரா என்ற ஊகங்கள் தற்போது வலுத்துள்ளன.  

மேலும், இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவும், மல்லிகார்ஜுன கார்கேவும் தெரிவித்துள்ளனர். டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா இருவரின் ஆதரவாளர்களும் தங்கள் தலைவர்களை முதல்வராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருவருக்குள்ளும் அரசியல் போர் நடந்து வரும் நிலையில், இருவரின் பெரிய அளவிலான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், முதல்வர் பதவியை யாருக்கு வழங்குவது என்பதை, சட்டப்பேரவை கட்சி இன்று முடிவு செய்யலாம்.

மேலும் படிக்க |  Karnataka Election Results 2023: எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வெற்றி பெற்றது - முழு பட்டியல் இதோ!

கர்நாடகாவின் வெற்றியின் பெருமை யாருக்கு?

டி.கே.சிவகுமார் இது குறித்து பேசுகையில், 'ஆளுமை குறித்து பேச இது நேரம் இல்லை. கட்சி மேலானது. இது சித்தராமையா அல்லது சிவகுமாரின் வெற்றி அல்ல. இதுவே இந்தியாவை இணைக்கும் முடிவு என்றார்.

வெற்றிக்கு பிறகு சித்தராமையா கூறிய கருத்து

காங்கிரஸின் அமோக வெற்றி குறித்து பேசிய சித்தாராமையா, இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, ஏழு கோடி கன்னடர்களின் வெற்றி என்றும், கூறினார். பாரதிய ஜனதாவும் (BJP), குமாரசாமியும் (JDS)  மாநிலத்தில் ஆட்சி செய்த போதெல்லாம், அவர்களால் நிலையான ஆட்சியை வழங்க முடியவில்லை. மக்கள் மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளனர் என்றார்.

யார் முதல்வர், யார் துணை முதல்வர்? இன்று முடிவு

முதல்வர் யார் என்பது குறித்தும், மற்ற முக்கிய விஷயங்கள் குறித்தும் சட்டப்பேரவை கட்சி கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் கட்சி மேலிட பார்வையாளர்களும் கலந்து கொள்வார்கள்.

2 முதல் 3 துணை முதல்வர்கள்

அரசாங்கத்தில் 2 முதல் 3 துணை முதல்வர்களை கட்சி தேர்ந்தெடுக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கான அறைகள் பெங்களூருவில் உள்ள இரண்டு தனியார் ஹோட்டல்களில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் அவர்கள் சனிக்கிழமை இரவுக்குள் மாநில தலைநகரை அடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று (மே 13) வெளியாகின. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பகால போக்குகளில் இருந்து காங்கிரஸ் அமோக வெற்றியை நோக்கி செல்கிறது. கிட்டத்தட்ட 135 இடங்களிலும், பாஜக 66 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஹெச்.டி.குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த முறை 37 தொகுதிகளை பிடித்த ஜேடிஎஸ் கட்சி இம்முறை 19 இடங்களையே கைப்பற்றியுள்ளது. பிற கட்சிகள் மற்றும் சியேச்சை 4 இடங்களை கைப்பற்றியுள்ளது.

தேர்தலில் 73.19% வாக்குகள் பதிவாகின

கர்நாடக சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக கடந்த புதன்கிழமை (மே 10) நடைபெற்றது. 73.19% வாக்குகள் பதிவாகின. தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் முன்பே, காங்கிரஸ் பெரும்பான்மை வலுவுக்கு தேவையான இடங்களை விட அதிக அளவில் முன்னணியில் இருந்த போதே, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தோல்வியை ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 3 ஆண்டுகள் தூக்கமில்லை... கண்ணீர் விட்டு கதறிய டி.கே. சிவகுமார் - கிடைக்குமா முதல்வர் அரியணை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News