டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணிபுரிந்த ஊழியருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, கோவிட் -19 வழக்குகள் நாடு தழுவிய அளவில் செவ்வாய்க்கிழமை ஒரு லட்சத்தை தாண்டியது, மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 1.01 லட்சமாக உயர்ந்துள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் 4,970 வழக்குகள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் இதுவரை 11,760 வழக்குகளும் உள்ளன. ராய்ட்டர்ஸைப் பொறுத்தவரை, இந்தியாவின் இறப்பு விகிதம் மற்ற பெரிய நாடுகளை விட குறைவாகவே உள்ளது.
கொரோனா வைரஸ் மருத்துவமனை, காவல்நிலையம், நீதிமன்றங்கள், குடியரசுத் தலைவர் மாளிகை உட்பட அனைத்து இடங்களிலும் புகுந்துவிட்டது. இதனால் அனைத்து இடங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று உறுதியாகி உள்ள ஊழியர் டெல்லியில் இருந்து தமிழகம் வந்த சிறப்பு ரயிலில் பயணித்துள்ள்ளார். இதனால் அவருடன் பழக்கத்திலிருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தற்போது அங்குக் கிருமி நாசினிகள் தெளித்துச் சுத்தப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.