இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஊச்சகட்டமாக 35,000 கொரோனா பாதிப்புகள் மற்றும் 606 இறப்புகள் பதிவாகியுள்ளன....
இந்தியாவின் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) தொற்றின் மொத்த எண்ணிக்கை 10,38,716-யை எட்டியுள்ளது. அதில், சுமார் 3,58,692 பேர் தற்போது சிக்கிசையில் உள்ளதாகவும், 6,53,751 பேர் தொற்றிலிருந்து குணப்படுத்தபட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் சுமார் 34,884 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ஒரே நாளில் மட்டும் சுமார் 671 உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 26,273 ஆக அதிகரித்துள்ளது.
அரசாங்க தரவுகளின்படி, மொத்த நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கை 10,38,716 ஆக உள்ளது. இதில் 3,58,692 செயலில் உள்ள வழக்குகள் மற்றும் 6,53,751 பேர் குணப்படுத்தப்பட்டு உள்ளனர். தொடர்ச்சியாக ஏழாவது நாளாக இது 28,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
S. No. | Name of State / UT | Active Cases* | Cured/Discharged/Migrated* | Deaths** | Total Confirmed cases* |
---|---|---|---|---|---|
1 | Andaman and Nicobar Islands | 52 | 142 | 0 | 194 |
2 | Andhra Pradesh | 19814 | 20298 | 534 | 40646 |
3 | Arunachal Pradesh | 431 | 175 | 3 | 609 |
4 | Assam | 6490 | 14105 | 51 | 20646 |
5 | Bihar | 8767 | 14621 | 201 | 23589 |
6 | Chandigarh | 169 | 480 | 11 | 660 |
7 | Chhattisgarh | 1429 | 3512 | 23 | 4964 |
8 | Dadra and Nagar Haveli and Daman and Diu | 182 | 401 | 2 | 585 |
9 | Delhi | 17235 | 99301 | 3571 | 120107 |
10 | Goa | 1337 | 1946 | 21 | 3304 |
11 | Gujarat | 11351 | 32973 | 2106 | 46430 |
12 | Haryana | 5752 | 18718 | 327 | 24797 |
13 | Himachal Pradesh | 382 | 1024 | 11 | 1417 |
14 | Jammu and Kashmir | 5968 | 6558 | 231 | 12757 |
15 | Jharkhand | 2305 | 2570 | 46 | 4921 |
16 | Karnataka | 33211 | 20757 | 1147 | 55115 |
17 | Kerala | 6033 | 4995 | 38 | 11066 |
18 | Ladakh | 177 | 973 | 1 | 1151 |
19 | Madhya Pradesh | 5870 | 14514 | 697 | 21081 |
20 | Maharashtra | 120780 | 160357 | 11452 | 292589 |
21 | Manipur | 637 | 1163 | 0 | 1800 |
22 | Meghalaya | 335 | 66 | 2 | 403 |
23 | Mizoram | 122 | 160 | 0 | 282 |
24 | Nagaland | 551 | 405 | 0 | 956 |
25 | Odisha | 4697 | 11330 | 83 | 16110 |
26 | Puducherry | 793 | 1014 | 25 | 1832 |
27 | Punjab | 2830 | 6373 | 239 | 9442 |
28 | Rajasthan | 6617 | 20626 | 546 | 27789 |
29 | Sikkim | 176 | 90 | 0 | 266 |
30 | Tamil Nadu | 47785 | 110807 | 2315 | 160907 |
31 | Telangana | 13388 | 28705 | 403 | 42496 |
32 | Tripura | 679 | 1684 | 3 | 2366 |
33 | Uttarakhand | 1030 | 3021 | 51 | 4102 |
34 | Uttar Pradesh | 16445 | 27634 | 1084 | 45163 |
35 | West Bengal | 14709 | 22253 | 1049 | 38011 |
Cases being reassigned to states | 163 | 163 | |||
Total# | 358692 | 653751 | 26273 | 1038716 |
READ | சுமார் ₹.3.5 லட்சம் மதிப்பில் தங்க N-95 முக கவசம் அணிந்து கெத்தாக வலம் வரும் ஆண்..!
கொரோனாவுக்கு நேற்று வரை 1,34,33,742 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது. அவற்றில், 3,61,024 மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டன. இந்தியாவின் மொத்தம் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் நேற்று 1 மில்லியனைத் தாண்டியது. அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலகளாவிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் வெள்ளிக்கிழமை 14 மில்லியனைக் கடந்துவிட்டன என்று ராய்ட்டர்ஸ் கணக்கின்படி, 100 மணி நேரத்திற்குள் 1 மில்லியன் பாதிப்புகள் முதன்முறையாக அதிகரித்துள்ளன.
ஜனவரி மாத தொடக்கத்தில் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த தொற்றுநோய், கிட்டத்தட்ட ஏழு மாதங்களில் 590,000-க்கும் அதிகமான மக்களைக் கொன்றது. தொற்றுநோயை அரசாங்கம் கையாண்டது குறித்து விமர்சித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தற்போதைய வேகத்தில் தொடர்ந்து பரவி வந்தால் ஆகஸ்ட் 10-க்குள் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் இருக்கும் என்று கூறியுள்ளார்.