COVID-19: தமிழகத்தை தொடர்ந்து பஞ்சாப், கர்நாடகாவிலும் கொரோனா.. இந்தியாவில் மொத்தம் 45 ஆக உயர்வு

பஞ்சாப் மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது குறித்து சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 10, 2020, 12:01 AM IST
COVID-19: தமிழகத்தை தொடர்ந்து பஞ்சாப், கர்நாடகாவிலும் கொரோனா.. இந்தியாவில் மொத்தம் 45 ஆக உயர்வு title=

புது டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு ஜெய்ப்பூர், ஆக்ரா, கேரளா, ஜம்மு, டெல்லி, உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, லடாக் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை அடுத்து தற்போது மேலும் இரண்டு மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது பஞ்சாப் மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது செய்யப்பட்டுள்ளது. இது சுகாதார அமைச்சகம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

அண்மையில் அமெரிக்காவிலிருந்து வீடு திரும்பிய பெங்களூரைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளருக்கு சோதனை செய்தா போது கொரோனா வைரஸ் இருப்பது தெரிய வந்துள்ளது. இது கர்நாடகாவின் முதல் COVID-19 நோயாளி என்று மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் டாக்டர் கே சுதாகர் தெரிவித்தார்.

அதேசமயம், பஞ்சாபில், கொரோனா வைரஸிற்கான முதல் வழக்கு கடந்த வாரம் இத்தாலியில் இருந்து தனது குடும்பத்தினருடன் திரும்பி வந்த ஒருவரிடம் இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக மார்ச் 9 ஆம் தேதி, கேரளா, ஜம்மு, டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் புதிதாக நான்கு பேருக்கு பாதிப்பு உள்ளது. ஜம்முவில் 63 வயதான ஒரு பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இது மாநிலத்தின் முதல் கேஸ் ஆகும்.

அதேபோல கேரளாவில் 3 வயது குழந்தை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இத்தாலியில் இருந்து நாடு திரும்பி உள்ளனர். தற்போது அந்த குழந்தை எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைக்கப்பட்டுள்ளார். இதுவரையில் இந்தியாவில் பதிவான முதல் குழந்தை வழக்கு இதுவாகும்.

ஜெய்ப்பூர், ஆக்ரா மற்றும் தெலுங்கானா, லடாக், தமிழ்நாடு - இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான பிற நகரங்கள் அடங்கும்.

Trending News