தாத்ரி சம்பவம்: புதிய ஆய்வில் எனக்கு சந்தேகம் :- உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ்

Last Updated : Jun 2, 2016, 10:49 AM IST
தாத்ரி சம்பவம்: புதிய ஆய்வில் எனக்கு சந்தேகம் :- உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் title=

உத்தரப் பிரதேச மாநிலமான தாத்ரியில் முகம்மது அக்லக் வீட்டில் இருந்தது பசுவின் இறைச்சியே என்று கூறும் தடயவியல் அறிக்கையின் நம்பகத்தன்மை இல்லை, என்னக்கு சந்தேகமாக இருக்கிறது  என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்துக்களின் புனித விலங்காக கருதப்படும் பசுவை வதை செய்வதை உத்தரப் பிரதேச மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் தாத்ரியில் இருக்கும் பிசாரா என்ற கிராமத்தில் பசுவின் இறைச்சியை சமைத்து உண்டதாக முகம்மது அக்லக் (52) என்பவர் ஒரு கும்பலால் கடந்த ஆண்டு அடித்துக் கொல்லப்பட்டார்.

கொலை செய்த கும்பலை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டன. மேலும் முகம்மது அக்லக் வீட்டில் கிடைத்த இறைச்சியின் மாதிரியை உ.பி.யின் கால்நடைத்துறைக்கு அனுப்பி ஆய்வு செய்யப்பட்டன. முதல்கட்ட அறிக்கையில் அது ஆட்டின் இறைச்சியே என்று கூறப்பட்டது. அடுத்ததாக இந்த இறைச்சியின் மாதிரியை இறுதி ஆய்வுக்காக மதுராவில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ''அக்லக் வீட்டில் இருந்தது ஆட்டின் இறைச்சி அல்ல, அது பசுவின் இறைச்சிதான் என்று மதுரா ஆய்வக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது'' என விசாரணை அதிகாரி கூறினார். இந்த அறிக்கை நொய்டா போலீஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது சம்பந்தமா விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்..

இது தொடர்பாக பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் கூறும்போது, ''இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி இந்துக்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். அக்லக் குடும்பத்தின் மீது பசுவதைக்கு எதிரான வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அவரது குடும்பத்துக்கு உ.பி. அரசு அளித்த அனைத்து சலுகைகளையும் திரும்பப் பெறவேண்டும்'' என்றார்.

இதைக்குறித்து உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் நேற்று கூறும்போது, ''இறைச்சியின் மாதிரி எங்கு அனுப்பி வைக்கப்பட்டது? அதை பெற்றுக்கொண்டது யார் யார்? அக்லக் வீட்டில் ஆட் சேபனைக்குரிய பொருள் எதுவும்  இல்லை. ஒவ்வொருவரும் இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அக்லக் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்'' என்றார்.

ஆனால் மதுரா ஆய்வக அறிக்கையை அக்லக் குடும்பத்தினர்  நிராகரித்துள்ளனர்.

Trending News