கொரோனா முழு அடைப்பில் குறிப்பிட்ட சில துறைகளுக்கு தளர்வு அளிக்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ள நிலையில், டெல்லி மக்கள் சாலைகளில் குவியத்துவங்கியுள்ளனர்.
டெல்லியில் மீண்டும் போக்குவரத்து நெரிசல்களுடன் வாகனங்கள் இயக்கப்படும் நிலையில், நாட்டில் கொரோனா அச்சம் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.
Taxi services resume in Delhi today during fourth phase of nationwide lockdown till May 31. Taxi drivers say, "We welcome govt's decision to resume taxi services. Taxis can operate with only 2 passengers at a time in a car. Govt should bring an insurance policy for taxi drivers". pic.twitter.com/sBPVzXPFR8
— ANI (@ANI) May 19, 2020
முன்னதாக, கொரோனா முழு அடைப்புக்கு மத்தியில் டெல்லியில் சந்தைகள் மற்றும் ஷாப்பிங் வளாகங்களை ஒற்றைப்படை அடிப்படையில் மீண்டும் திறக்க டெல்லி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
அதேவேளையில் பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் டாக்ஸிகள் வரையறுக்கப்பட்ட பயணிகளுடன் இயக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திங்களன்று தலைநகரில், மே 31 வரை நீட்டிக்கப்பட்ட லாக் டவுன் 4 விவரங்களை அளித்தபோது தெரிவித்தார். எனினும் கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மண்டலங்கள் அல்லது பகுதிகளுக்கு இந்த மாற்றங்கள் பொருந்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Delhi: People arrive at wholesale fruit and vegetable market in Ghazipur, to make purchases amid the #CoronavirusPandemic. pic.twitter.com/NdxsxebBEm
— ANI (@ANI) May 19, 2020
"பொருளாதார நடவடிக்கைகளை படிப்படியாக திறக்கும் நோக்கி நாங்கள் முயற்சித்து வருகிறோம். நம்மிடம் ஒரு தடுப்பூசி வரும் வரை, இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியாது. கொரோனா வைரஸுடன் வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்" என்றும் கெஜ்ரிவால் இதன்போது தெரிவித்துள்ளார்.
முகமூடிகள் மற்றும் சமூக இடைவெளி இன்றியமையாததாக இருக்கும் இந்தியாவில், டெல்லி அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் வழக்குகள் உள்ள பெருநகரங்களில் ஒன்றாகும். டெல்லியில் 10,000-க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன.
"கொரோனா இந்தியாவுக்கு வந்தபோது, நாங்கள் தயாராக இல்லை. கொரோனாவை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த தயாரிப்புகள் எங்களிடம் இல்லை. கடந்த ஒன்றரை மாதங்களில், தனி மருத்துவமனைகள், சோதனை கருவிகள், வென்டிலேட்டர்கள் ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம்" என்றும் முதல்வர் இந்த சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று மொத்த சந்தை பகுதிகளான கைசாபூர், ஆனந்த் விகார் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. டெல்லியின் டேக்ஸி, இ-ரிக்சா சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டு, டெல்லி சாலைகள் போக்குவரத்து நெரிசல்களுடன் காணப்பட்டது.