கடும் குளிரில் டெல்லி: திரும்பிய இடமெல்லாம் பனி; தீ மூட்டி குளிர் காயும் மக்கள்

கடந்த 22 ஆண்டுகளில் மிக நீண்ட குளிர்ச்சியை டிசம்பர் மாதத்தில் டெல்லி காணக்கூடும் என்று ஐஎம்டி (IMD) தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 24, 2019, 12:23 PM IST
கடும் குளிரில் டெல்லி: திரும்பிய இடமெல்லாம் பனி; தீ மூட்டி குளிர் காயும் மக்கள் title=

புது டெல்லி: தேசிய தலைநகரத்தில் 1997 ஆம் ஆண்டுக்கு பிறகு டிசம்பர் மாதத்தில் மிக கடுமையான குளிர்ச்சியைக் காணக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவரான குல்தீப் ஸ்ரீவாஸ்தவாவின் கூற்றுப்படி, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைந்தது 4.5 டிகிரி செல்சியஸ் இருக்கும் போது அது "குளிர் நாள்" (Cold Day) ஆகும். அதேபோல அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைந்தது 6.5 டிகிரி செல்சியஸ் (Degrees Celsius) இருந்தால் அது கடுமையான குளிர் நாள் என்று கூறியுள்ளார்.

நாட்டின் தலைநகரம் நடுங்கி கொண்டிருக்கிறது. டெல்லியில் பொதுவாக அக்டோபர் மாதம் முதல் பனிகாலம் தொடங்கும். அடுத்தடுத்து மாதங்கள் தொடர்ந்து அதிகமாகி டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் அதிக அளவில் பனிபொழிவு ஏற்படும். தற்போது டெல்லியில் பயங்கர குளிர் காலம் நிலவுகிறது. வீட்டை விட்டு வெளியே வந்தால் ரத்தத்தை உறைய வைப்பது போல உள்ளது. டெல்லியில் தினமும் குளிர் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. 

டெல்லியில் இன்று காலை ஏழு மணிக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரியாக பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 15 டிகிரிக்கு கீழே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று (திங்கள்கிழமை) கூட டெல்லியில் கடுமையான குளிர் இருந்தது. கடந்த எட்டு நாட்களாகவே அதிக பனிப்பொழிவு காரணமாக குளிர் காலம் வெப்பநிலை ஒரு புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. 

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து எட்டாவது நாளாக கடும் குளிர் (Cold Spel) நிலவுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ் அளவை குறைந்தது. இத்தகைய நாட்கள் "குளிரான நாட்கள்" என்று அழைக்கப்படுகின்றன. வெப்பநிலை இயல்பை விட 4.4 டிகிரிக்கு கீழே இருக்கும்போது குளிரான நாளாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், வெப்பநிலை இயல்பை விட 6.4 டிகிரிக்கு குறையும் போது 'கடுமையான குளிர் அல்லது குளிர் நாள்' என்று அழைக்கப்படுகிறது. 

நேற்று (திங்கள்கிழமை) டிசம்பரின் ஐந்தாவது கடுமையான குளிர் நாளாகும். 2014 ஆம் ஆண்டில் இதுபோன்று இரண்டு நாட்கள் மட்டுமே வந்திருந்தாலும், 22 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக டெல்லி மக்கள் அதிக காலத்துக்கு "கடுமையான குளிர்" தாங்கிக்கொண்டு பற்களை கடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதற்கு முன்பு, கடைசியாக 2014 டிசம்பரில் குளிர் காலம் நீண்ட நாட்களுக்கு தொடர்ந்தது. ஆனால் இந்த முறை குளிர் அதைவிட அதிகமாக உள்ளது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News