எமர்ஜென்ஸி என்ற பெயரில் இந்தியாவின் ஆன்மாவை காங்கிரஸ் கட்சி சிதைத்துவிட்டது என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்!
நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதில் அளித்து பிரதமர் மோடி சுமார் 70 நிமிடங்களுக்கு உரையாற்றினார்.
நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்டதாவது., "காங்கிரஸ கட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர் என்பதன் வெளிப்பாடு தான் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஆணவம் அதிகம் இதன் காரணமாகவே நடந்து முடிந்த தேர்தலில் அக்கட்சி தோல்வி கண்டது.
ஒரு குடும்பத்திற்கு நலன் பயக்கும் காரியத்தில் மட்டுமை காங்கிரஸ் கட்சி ஈடுப்பட்டது. மக்களின் பொதுநலத்தில் காங்கிரஸ் கட்சி நாட்டம் ஏதும் காட்டவில்லை. எனவே காங்கிரஸ் மிக உயர்ந்த இடத்திற்கு சென்றுள்ளது.
மிக உயர்ந்த இடத்திற்கு சென்றுவிட்டதால் பூமியில் இருக்கும் மக்கள் அந்த கட்சியின் கண்களுக்கு தெரியாமல் போனது. ஆனால் பாஜக கட்சியினராகிய எங்களுக்கு உயரத்திற்கு செல்ல வேண்டும் என்ற இலக்கு இல்லை. நாங்கள் மக்களுடன் கைகோர்த்து நிற்க வேண்டும். அதுதான் எங்களது லட்சியம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் காங்கிரஸ் கட்சி இரண்டு முறை பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியதுவம் அளிக்காமல் தோற்றுவிட்டது. 1950-களில் சீரான சிவில் கோட் விவாதிக்கப்பட்டபோது அவர்கள் முதலில் தவறவிட்டனர், பின்னர் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஷா பானோ வழக்கு வந்தபோது தவறவிட்டனர்.
இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக முத்தலாக் மசோதாவின் போது தவறவிட்டனர் என குறிப்பிட்டு பேசினார். நாட்டில் ஷா பானோ வழக்கு விவாதிக்கப்பட்டு வந்த நேரத்தில் 'முஸ்லிம்களின் மேம்பாடு காங்கிரஸின் பொறுப்பு அல்ல, அவர்கள் குழியில் பொய் சொல்ல விரும்பினால், அவர்கள் இருக்கட்டும்' என ஒரு காங்கிரஸ் அமைச்சர் கூறியதாக செய்திகள் வெளியானது எனவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
5 ஆண்டுகால ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதனால் தான் 2014-ல் கிடைத்த வெற்றியை விட மாபெரும் வெற்றி எங்களுக்கு இந்த மக்களவை தேர்தலில் மக்கள் கொடுத்துள்ளனர். இப்போது தேர்தல் அனைத்தும் முடிந்து விட்டது. மக்களின் நலனுக்காக நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.