Indian Navy ரஷ்ய கடற்படையுடன் கூட்டு பயிற்சியை மேற்கொள்வதற்கான காரணம் தெரியுமா?

கிழக்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (Eastern Indian Ocean Region (IOR)) ரஷ்ய கூட்டமைப்பு கடற்படை (Russian Federation Navy (RuFN)) உடன் இந்திய கடற்படையின் (Indian Navy) இரண்டு நாள்  பயிற்சி நடைபெற்றுவருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 5, 2020, 01:42 PM IST
  • இந்திய கடற்படை வலிமை மிக்கது
  • பிற நாட்டு கடற்படைகளுடன் இணைந்து கூட்டு பயிற்சியை மேற்கொள்கிறது இந்தியா
  • ரஷ்யாவுடன் நீண்ட ராணுவ உறவைக் கொண்டுள்ளது இந்தியா
Indian Navy ரஷ்ய கடற்படையுடன் கூட்டு பயிற்சியை மேற்கொள்வதற்கான காரணம் தெரியுமா? title=

புதுடெல்லி: கிழக்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (Eastern Indian Ocean Region (IOR)) ரஷ்ய கூட்டமைப்பு கடற்படை (Russian Federation Navy (RuFN)) உடன் இந்திய கடற்படையின் (Indian Navy) இரண்டு நாள்  பயிற்சி நடைபெற்றுவருகிறது.

இந்த பயிற்சியில் ஏவுகணை கப்பல் Varyag, பெரிய நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் அட்மிரல் பாண்டலீவ் (Admiral Panteleyev) மற்றும் நடுத்தர கடல் டேங்கர் பெச்செங்கா ஆகியவை பங்கேற்றுள்ளன.  உள்நாட்டில் கட்டமைக்கப்பட்டு, வழிநடத்தப்படும் சிவாலிக் (Shivalik) மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு கொர்வெட் காட்மட் (corvette Kadmatt) ஆகியவையும் இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றன.  
 
கடற்படைகளுக்கு இடையில் சிறந்த நட்பையும் செயல்திறனை மேம்படுத்துதல், புரிந்துணர்வை மேம்படுத்துதல் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவையே இந்த கூட்டுப் பயிற்சியின் நோக்கங்கள் ஆகும். இந்த பயிற்சியில், நீர்மூழ்கி எதிர்ப்பு போர் பயிற்சிகள், ஆயுதம் ஏந்துதல், ஹெலிகாப்டர் (helicopter) நடவடிக்கைகள் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. 

Also Read | இந்திய ராணுவத்தில் 'துணை இராணுவத் தளபதி' பதவிக்கு அரசாங்கம் ஒப்புதல்

இந்த பயிற்சி டிசம்பர் 4 ம் தேதி இந்தியாவின் ‘கடற்படை தினத்தை’  முன்னிட்டு மேற்கொள்ளப்படுகிறது, இது இரு நட்பு நாடுகளின் பகிர்ந்து கொள்ளப்பட்ட நட்பின் வலுவான பிணைப்பை வலியுறுத்துகிறது. இந்திய கடற்படையின் (Indian Navy) முழு அர்ப்பணிப்புடன் இதுபோன்ற கூட்டு பயிற்சிகள் பல நாடுகளுடன் நடத்தப்படுவது வழக்கம்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR    zeenews.india.com/tamil/topics/

Trending News