இந்தியா எப்பொழுதும் சமாதானத்தை விரும்பும் நாடாகும் - ராஜ்நாத் சிங்

Last Updated : Aug 21, 2017, 05:59 PM IST
இந்தியா எப்பொழுதும் சமாதானத்தை விரும்பும் நாடாகும் - ராஜ்நாத் சிங் title=

இந்திய பாதுகாப்பு படைகள் நாட்டின் பிராந்தியங்களை தைரியமாக பாதுகாக்க முடியும் என்று உள்துறை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

இந்திய-திபெத்திய எல்லைக் காவல்துறை (ITBP) ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:

நமது பாதுகாப்புப் படைகள் இந்திய எல்லைகளை பாதுகாப்பதற்கான அனைத்து சக்தியையும் கொண்டுள்ளன என்றும், குளிராக இருந்தாலும், வெயிலாக இருந்தாலும் நமது வீரர்கள் சோர்வடைவதில்லை. நமிடம் அத்தகைய தைரியமான துணிச்சலான வீரர்கள் உள்ளனர்.

இந்திய-திபெத்திய எல்லைக் காவல்துறை படை, ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசம் வரை நீளும் சுமார் 4,057 கிமீ நீளமுள்ள சினோ-இந்திய எல்லையை பாதுகாக்கிறது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நடக்கும் விவாரத்து குறித்து பேசிய அவர், "விரைவில் தீர்வு கிடைக்கும், சீனா சாதகமான நடவடிக்கையை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்" எனவும் தெரிவித்தார். 

"எந்த நாட்டையும் இந்தியா ஒருபோதும் தாக்கவில்லை, மேலும் இந்தியா அதன் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கான எண்ணம் இல்லை. ஆனால் எந்தவொரு சூழ்நிலையையும் எல்லையில் பிரச்சனை ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ள இந்திய பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில் உள்ளது.

மேலும் நான், அண்டை நாடுகளுக்கு ஒன்ரை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், இந்தியா எப்பொழுதும் சமாதானத்தை விரும்பும் நாடாகும். எனவே அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணவே இந்தியா விரும்புகிறது என ராஜ்நாத் தெரிவித்தார்.

Trending News