மது ஒழிப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, நீண்டகாலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து இந்த கோரிக்கையை பல்வேறு தளங்களில் முன்வைத்து போராடுகின்றனர். தேர்தல் நேரங்களில் இந்த கோரிக்கைக்கு செவி கொடுக்கும் அரசியல் கட்சிகள், தேர்தல் முடிந்தபிறகு மது ஒழிப்பு என்ற பிரச்சாரத்தை கிடப்பில் போட்டுவிடுகின்றனர்.
ALSO READ | Banks Working days: 2022 ஜனவரியில் 15 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும்
இந்நிலையில், புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் புத்தாண்டையொட்டி மது ஒழிப்பு குறித்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார். அவர் பெயர் அருண் ஓஹர். ராவணன் வேடமணிந்து கொண்ட அவர், சாலைகளில் செல்லும் பயணிகளுக்கு பால் பாக்கெட் ஒன்றை கொடுத்து, இது மது அல்ல... பால் எனக் கூறி, மதுவினால் ஏற்படும் தீமை குறித்தும் அவர்களிடம் எடுத்துரைக்கிறார்.
அருண் ஓஹரின் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும், அவரின் இத்தகைய முயற்சிக்கு பாராட்டுகளும் கிடைத்துள்ளது. இது குறித்து பேசிய அருண் ஓஹர், மதுவினால் நாட்டில் பல்வேறு குடும்பங்கள் மிகப்பெரிய பிரச்சனைகளை சந்தித்து வருவதாக தெரிவித்தார். இத்தகைய குடும்பச் சிக்கல்களால் குழந்தைகள் படிக்க முடியாமல், இளம் வயதிலேயே வேலைக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கும் அவர், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை எனக் கூறியுள்ளார். அதேநேரத்தில் கோவிட் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR