நிற்காமல் பெய்யும் மழை! கொச்சியில் அனைத்து சேவை முடக்கம்!

கேரளாவில் பெய்து வரும் கன மழையின் காரணமாக பெரும்பாலான சாலைகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணத்தால் கொச்சியில் மெட்ரோ சேவை, விமான சேவை, ரயில் சேவை, பேருந்து சேவை என அனைத்தும் முடங்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 16, 2018, 10:05 AM IST
நிற்காமல் பெய்யும் மழை! கொச்சியில் அனைத்து சேவை முடக்கம்! title=

கேரளாவில் பெய்து வரும் கன மழையின் காரணமாக பெரும்பாலான சாலைகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணத்தால் கொச்சியில் மெட்ரோ சேவை, விமான சேவை, ரயில் சேவை, பேருந்து சேவை என அனைத்தும் முடங்கியுள்ளது.

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8 முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் கேரளா முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில்  வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டு உள்ளது. கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 67-க்கும் மேற்ப்பட்டோர் பேர் பலியாகியுள்ளனர். 

கனமழை காரணமாக கேரளாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரப்பி வருகின்றனர். அதில் குறிப்பாக 20-க்கு மேற்ப்பட்ட அணைகள் தங்கள் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்படுகிறது.

கேரளத்தின் 7 மாவட்டங்களில் வெள்ள சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்ட்டு உள்ளது. பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோட் மற்றும் இடுக்கி மாவட்டங்களாகும். இதில் இடுக்கி மடட்டத்தில் வரும் ஆகஸ்ட் 17-ம் நாள் வரை ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கனமழை காரணமாக கொச்சி விமான நிலைய சேவைகளை வரும் சனிக்கிழமை நண்பகல் 2 மணி வரை அனைத்து விதமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர் கனமழை காரணத்தால் கொச்சியில் மெட்ரோ சேவை, விமான சேவை, ரயில் சேவை, பேருந்து சேவை என அனைத்தும் முடங்கியுள்ளது.

 

 

 

 

 

 

Trending News