அஸ்ஸாம் மாநிலத்தின் சில இடங்களில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.5 ஆகப் பதிவானது...!
அஸ்ஸாம் மாநிலத்தில் காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானதாக நிலநடுக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், எந்த ஒரு உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என நிலநடுக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அசாமை தொடர்ந்து மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் நில அதிர்வு உணரப்பட்டது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Earthquake measuring 5.5 on the Richter scale hits parts of Assam. Tremors also felt in parts of West Bengal; visuals from Siliguri. pic.twitter.com/pixNPJ85or
— ANI (@ANI) September 12, 2018
நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி இதுவரை வரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக இன்று காலை ஜம்மு மற்றும் கஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.