தேர்தல் விதிகளை மீறியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் நவஜத் சித்துவிற்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது!
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நவஜத் சித்து தேர்தல் விதிகளை மீறியதால் 72 மணி நேரத்திற்கு பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பொதுக்கூட்டம், பிரச்சார பேரணி, பொதுமக்கள் ஊர்வலம் ஆகியவற்றிலும் கலந்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவானது நாளை (ஏப்ரல் 23) காலை 10 மணி முதல் நடைமுறைக்கு வருகின்றது.
Election Commission of India bars Punjab Minister Navjot Singh Sidhu from holding any public meeting, road show, public rally & interviews in media in connection with ongoing elections, for 72 hours from 10 am on 23 April 2019. #LokSabhaElections2019 pic.twitter.com/VqPOjAAOg2
— ANI (@ANI) April 22, 2019
முன்னதாக பிகார் மாநிலம் கைத்தார் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய சித்து, இஸ்லாமிய வாக்களர்கள் ஒன்றினைந்து வாக்களித்து பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என தெரிவித்தார். தேர்தல் விதிமுறை அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் மத ரீதியான பிரச்சாரங்கள் தடை விதிக்கப்பட்ட ஒன்றாகும்.
அதன் அடிப்படையில் சித்துவிடம் விளக்கம் கேட்டு அவருக்கு தேர்தல் ஆணையம் முன்னதாக கடிதம் அனுப்பியது. இந்நிலையில் தற்போது அவருக்கு பிரச்சாரம் மேற்கொள்ள 72 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.