கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

Last Updated : Apr 17, 2017, 02:03 PM IST
கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் title=

வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்திற்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவருக்குச் சொந்தமான அத்வாண்டேஜ் ஸ்ட்ராட்டிஜிக் கன்சல்டிங் (Advantage Strategic Consulting) என்ற நிறுவனம் ரூ.45 கோடி அன்னியச் செலாவணி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

மேலும், கார்த்தி சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படும் வாசன் ஹெல்த் கேர் நிர்வாகம் ரூ.2262 கோடி அன்னியச் செலாவணி மோசடி செய்ததாகவும் அமலாக்கத்துறை இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Trending News