வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்?

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பை கட்டாயமாக்குவது குறித்து மத்திய சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது!

Last Updated : Aug 16, 2019, 02:45 PM IST
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்? title=

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பை கட்டாயமாக்குவது குறித்து மத்திய சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது!

இது தொடர்பாக சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் முறைகேடுகளை தடுக்க வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பது அவசியம், என குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே பான் எண், வங்கி கணக்கு, ரேஷன் கார்டு, எரிவாயு சிலிண்டர், செல்போன் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த கடிதத்தில் குறிப்பிடுகையில்., வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதால் வாக்காளர் பட்டியலில் ஒரே பெயர் பலமுறை இடம் பெறுவதை தடுக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. அத்துடன் போலி வாக்காளர்கள் கள்ள ஓட்டு போடுவது போன்ற அனைத்து முறைகேடுகளையும் இதன் மூலம் தடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. வாக்காளர் அட்டை, ஆதார் எண் இணைப்பை கட்டாயப்படுத்த வசதியாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும், மத்திய சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக, அனைத்து வாக்காளர் அட்டைகளுடனும் 12 இலக்க ஆதார் எண்ணை இணைப்பது தன்னார்வமானது என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இருப்பினும், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோட்டி 2016-ல் பொறுப்பேற்ற பின்னர் வாக்கெடுப்பு குழு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. எனினும் இதுவரை 32 கோடி ஆதார் எண்கள் வாக்காளர் அடையாள அட்டைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

பின்னர் ஜூலை 2017-ல், வாக்காளர்களின் ஆதார் விவரங்களை சேகரித்து அவர்களின் தரவுத்தளத்துடன் இணைப்பதற்காக தேர்தல் ஆணையம் தனது விண்ணப்பத்தை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News