குஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு!! காங்கிரஸ் முன்னிலை!!

பல இடங்களில் முன்னிலை வகிக்கும் பாஜக கூட்டணி, குஜராத், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 24, 2019, 11:25 AM IST
குஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு!! காங்கிரஸ் முன்னிலை!!

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. 51 சட்டசபை இடைத்தேர்தல், 2 மக்களை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வருகின்றன. பல இடங்களில் முன்னிலை வகிக்கும் பாஜக கூட்டணி, குஜராத், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. 

குஜராத் மாநிலத்தில் 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் மூன்று தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், இரண்டு தொகுதியில் பாரதி ஜனதா கட்சியும் முன்னிலை வகிக்கிறது. அதேபோல கேரளாவில் நடைபெற்ற 5 சட்டமன்ற இடைதேர்தலில் மூன்று இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும், இரண்டு இடங்களில் இடதுசாரி கூட்டணியும் முன்னிலை. ஐந்து தொகுதியில் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.

ஆனால் மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜகவின் கை தான் ஓங்கி இருக்கிறது. ஏற்கனவே மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சியும், ஹரியானாவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தை பொறுத்த வரை விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. புதுச்சேரி காமராஜ்நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக-சிவசேனா கூட்டணி 288 சட்டமன்ற இடங்களில் 99 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது, அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 61 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, என்சிபி 48 இல் முன்னிலையில் உள்ளது. இருப்பினும், ஆச்சரியம் என்னவென்றால், 2014 உடன் ஒப்பிடும்போது பாஜகவின் வாக்கு சதவீதம் கணிசமான உயர்ந்துள்ளது எனத் தெரிகிறது.

More Stories

Trending News