டெல்லி மதுபான ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்

Sanjay Singh Gets Bail: ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கின் ஜாமீன் வழங்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்த நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 2, 2024, 03:33 PM IST
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் title=

Delhi Aam Aadmi MP Sanjay Singh: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவரின் ஜாமீன் கோரிக்கைக்கு அமலாக்கத்துறை ஆட்சேபனை தெரிவிக்காததால், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிறையில் உள்ள நிலையில், சஞ்சய் சிங்கின் ஜாமீன் அக்கட்சிக்கு மிகப்பெரிய ஆறுதலாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் இந்த உத்தரவை வேறு வழக்குக்கு முன் உதாரணமாக கொள்ளக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் சஞ்சய் சிங் கைது

2021-22 ஆம் ஆண்டிற்கான டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் கடந்த ஆண்டு அக்டோபரில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதாவது முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்குப் பிறகு, இந்த வழக்கில் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டார்.

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் ஜாமீன் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் தீபங்கர் தத்தா, நீதிபதி பிபி வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. சஞ்சய் சிங்கை இன்னும் ஏன் சிறையில் அடைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையிடம் பெஞ்ச் கேள்வி எழுப்பியது.

மேலும் படிக்க - முதல்வர் பதவியில் இருந்து நீங்குங்கள்.. மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்.. கெஜ்ரிவால் நிம்மதி

சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை இல்லை -அமலாக்கத் துறை

சஞ்சய் சிங்கின் வக்கீல், அவர் பணமோசடி செய்தது உறுதி செய்யப்படவில்லை என்றும், இதுவரை பணப் பரிவர்த்தனை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், அவருக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் இல்லை.. இதையும் மீறி சஞ்சய் சிங் 6 மாதங்களாக சிறையில் உள்ளார் என வாதிட்டார். இதனையடுத்து இந்த வழக்கில் ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்கினால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று அமலாக்கத் துறை தெரிவித்தது. 

சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் கிடைத்தது

இதனையடுது எந்த குற்ற வழக்குகளும் நிலுவையில் இல்லை என்பதை மேற்கோள் காட்டி இறுதியாக உச்ச நீதிமன்றம் இன்று சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்கியது. மேலும் சஞ்சய் சிங்கின் ஜாமீன் வழங்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்த நிலையில், உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மி தலைவருக்கு உச்ச நீதிமன்றம் வேண்டுகோள்

மேலும் டெல்லி கலால் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டாம் என்று ஆம் ஆத்மி தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

திகார் சிறையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

மதுபானக் கொள்கை தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். தற்போது அவர் திகார் சிறையில் உள்ளார். வரும் நாட்களில் மேலும் பல ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அமைச்சர் அதிஷி அச்சம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க - அடுத்த முதல்வர் யார்? முக்கிய ஆலோசனை.. கெஜ்ரிவால் இல்லத்தில் கூடிய ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News