ஒவ்வொரு முறையும் இந்தியாவில் தேர்தல் நடந்து முடிந்தால், தோல்வி அடையும் கட்சி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுப்புவது வழக்கம். இந்தியாவில் காலகாலமாக வாக்குச்சீட்டு முறையை தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. தேர்தல் ஆணையம் மேற்கொண்ட முயற்சி மூலம், கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் வாக்குச்சீட்டு முறை தவிர்க்கப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு முறையை கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் எந்த தேர்தல் ஆனாலும் ஏறக்குறைய மின்னணு வாக்குப்பதிவு முறையே பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் சமீபகாலமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது தொடர்ந்து குற்றசாட்டுக்கள் வைக்கப்பட்டு வருகிறது. தேர்தலில் பயன்படுத்தப்படும் EVM கள் முற்றிலும் பாதுகாப்பாக இல்லை என்றும், திரும்பவும் வாக்குச்சீட்டு முறை கொண்டுவர வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த குற்றசாட்டுக்கள் அனைத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. EVM இயந்திரத்தில் மோசடி எதுவும் செய்யமுடியாது. இந்த மசின் மிகவும் பாதுகாப்பானது எனவும் கூறி வருகிறது.
இந்தநிலையில், லண்டனில் உள்ள இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம், தேர்தலில் பயன்படுத்தப்படும் EVM-களில் முறைகேடு செய்யலாம் எனக்கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை நிருப்பித்து காட்ட முடியும் என செய்தியாளர் மாநாடு என்ற நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதுக்குறித்து அறிவிப்பை இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கலந்துக்கொண்டு உள்ளார். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்துக்கொண்டு காங்கிரஸ் விளையாடுகிறது என பிஜேபி செய்தித் தொடர்பாளர் நளின் கோலி தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கையின்படி, மின்னணு வாக்களிப்பு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படும் என்று ஒரு அமெரிக்க சைபர் வல்லுனர் கூறுகிறார். அவர் EVM இயந்திரத்தை எப்பொழுது வேண்டுமாலும் ஹேக் செய்யலாம். இதற்கு முன்பும் ஹேக் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் EVM மூலம் பற்றி ஒரு பெரிய சதித்திட்டம் நடந்து இருப்பதாக கூறினார். மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் அதிக அளவிலான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்யப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தல் வர உள்ளதால், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. அடுத்த கட்டமாக தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கும்? என்ற எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டு உள்ளது.