பாமக-வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய சாட்டையடி கேள்விகள்..!

Chennai High Court | அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் போராட்டம் நடத்த அனுமதி கேட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் சாட்டையடி கேள்விகளை எழுப்பியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 2, 2025, 02:21 PM IST
  • சென்னையில் பாமக நடத்திய போராட்டம்
  • காவல்துறை அனுமதி மறுத்து கைது செய்தது
  • சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
பாமக-வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய சாட்டையடி கேள்விகள்..! title=

Chennai High Court, PMK Protest | சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு பாமக சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு சென்னை மாநகர காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என பாமக அறிவித்தது. சவுமியா அன்புமணி தலைமையில் பாமகவினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்துக்கு திரண்டனர். ஆனால், காவல்துறை போராட்டத்துக்கு அனுமதி மறுத்து சவுமியா அன்புமணி உள்ளிட்ட பாமகவினரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அப்போது பேசிய சவுமியா அன்புமணி, தமிழ்நாடு முழுவதும் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், இதனை தடுக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டது என குற்றம்சாட்டினார். பாலியல் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கூட இத்தனை காவல்துறையினர் செல்லவில்லை, ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிகேட்டு போராட்டம் நடத்த வந்த பாட்டாளி மக்கள் கட்சியினரை கைது செய்ய இத்தனை போலீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது வெட்கமாக இருப்பதாக ஆவேசமாக கூறினார். இதனைத் தொடர்ந்து அவர் உட்பட பாமகவினர் தனியார் மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் திருமண நிதியுதவி திட்டம் : யாருக்கெல்லாம் கிடைக்கும்?

இதனிடையே சென்னையில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி பாமக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், போராட்டம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட முடியாது என கூறி பாமக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையின்போது பாட்டாளி மக்கள் கட்சிக்கு சாட்டையடி கேள்விகளை எழுப்பினார். 

பாமக மனு மீதான விசாரணையின்போது, பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன் ?, போராட்டம் நடத்தும் ஒவவொருவரும் முதலில் தங்கள் மனதில் கை வைத்து கூறுங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று, இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்க பட வேண்டும் என கூறினார். இந்த விவகாரத்தை அனைவரும் அரிசியலாக்கி வருகிறார்கள், இந்த விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது, காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால், போராட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல, வெறும் விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள் எனவும் நீதிபதி வேல்முருகன் காட்டமாக கூறினார்.

மேலும் படிக்க | பள்ளிகள் நாளைக்கு உண்டா... இல்லையா...? பள்ளிக்கல்வித்துறை லேட்டஸ்ட் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News