Hansika Motwani Quick Weight Loss Tips : தமிழ் திரையுலகில் சில படங்களிலேயே நடித்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியல் பெரிய இடத்தை பிடித்திருப்பவர் ஹன்சிகா மோத்வானி. வட இந்தியாவை சேர்ந்த இவர் தமிழில் அறிமுகமானது எங்கேயும் காதல் மற்றும் மாப்பிள்ளை படங்கள் மூலமாக அறிமுகமானார். அந்த படங்களில் நடிக்கும் போது, இவர் தனது 18-20 வயதிற்குள் இருந்தார். அப்போது, பார்ப்பதற்கு கொஞ்சம் கொழுக் மொழுக் நாயகியாக இருந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் எடையை குறைத்தார். இந்த நிலையில், அவர் எப்படி உடல் எடையை குறித்தார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
எடை குறைந்த ஹன்சிகா:
நடிகை ஹன்சிகா, திரையுலகிற்கு வந்த புதிதில் கொஞ்சம் உடல் பருமனுடன் இருந்தார். அப்போது ரசிகர்கள் அவரை, “ஊத்துக்குழி வெண்ணை” என்று கூறி வந்தனர். மிக இளம் வயதில் இருந்த போது, பல படங்களில் இப்படி பூசினாற்போலவே இருந்து வந்த அவர், அதன் பிறகு அப்படியே உடல் எடையை குறைந்தார். இந்த நிலையில், அவர் எப்படி எடை குறைத்தார் என்பது குறித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. இதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறித்தும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
காலையில் குடிக்கும் பானம்:
உடல் எடையை குறைக்க, பலர் காலையில் பிளாக் காஃபி, அல்லது கிரீன் டீ குடிப்பது வழக்கம். இதை பின்பற்றிய ஹன்சிகா, காலையில் தினமும் எழுந்தவுடன் கண்டிப்பாக 2 கப் தண்ணீர் குடிப்பாராம். மேலும், ஒரு கப் கிரீன் டீயை குடித்து விட்டு தனது நாளை ஆரம்பிப்பாராம். கிரீன் டீ, உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி தருவதுடன் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
காலை உணவு:
ஹன்சிகா, தினமும் ஜிம் போவதற்கு முன்பாக ஒரு கிண்ணத்தில் பப்பாளி பழத்தை சாப்பிடுவாராம். இது, அவருக்கு ஆரோக்கியமான காலை உணவாக திகழ்வதுடன் நல்ல ஊட்டச்சத்துடன் நிறைந்த உணவாகவும் இருக்கிறது. எப்போதாவது இதனுடன் சேர்த்து முட்டையின் வெள்ளைக்கருவுடன் போட்ட ஆம்ப்லெட்டை சாப்பிடுவாராம்.
வேகவைத்த காய்கறிகள்:
உடல் எடையை குறைக்க, எண்ணெய் இல்லாமல் அனைத்து உணவுகளையும் சாப்பிட வேண்டும். எனவே பலரும் அவர்களின் உணவை வேகவைத்து சாப்பிடுவர். அப்படி, காய்கறிகளையும் வேகவைத்து சாப்பிட வேண்டும். இவை சீக்கிரமாக செரிமானம் ஆவதுடன், கலோரிகளும் குறைவாக இருப்பதால் அதிகமான புரதச்சத்துகளை உடலுக்கு அளிக்கிறது.
மாலை ஸ்னாக்ஸ்:
ஹன்சிகா, தனது மாலை ஹெல்தி ஸ்னாக்ஸை எப்போதும் தவற விட மாட்டாராம். மாலையில் ஒரு கப் கிரீன் டீ மற்றும் சர்க்கரை சேர்க்காத பிஸ்கட்டுகளை சாப்பிடும் இவர் அதனால் தன் வெயிட் பாலன்ஸ் ஆவதாகவும் கூறுகிறார்.
மிதமான டின்னர்:
ஹன்சிகா, இரவில் மிதமான இரவு உணவுகளை மட்டுமே சாப்பிடுவாராம். சாலட், வேகவைத்த காய்கறிகளை சாப்பிடும் இவர், தனது டின்னரில் குறைவான கலோரிகள் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார். இவை எளிதில் செரிமானம் ஆவதாகவும் இருக்கிறதாம்.
கவனம்…
அனைவரது உடலும் ஹன்சிகா போல இருக்காது. அதே போல உடற்பயிற்சி மற்றும் டயட் ஆரம்பித்த ஒரு சில நாட்களுக்குள்ளாகவே எடை குறைந்து விடாது. எனவே, எடையை குறைக்க இந்த கடின உழைப்பு மற்றும் முயற்சிகளுடன் சேர்த்து பொறுமையாக விடாமுயற்சி இருப்பதும் அவசியம்.
மேலும் படிக்க | 4 மாதங்களில் வெயிட் லாஸ் செய்ய வரலட்சுமி செய்த 4 விஷயங்கள்! ரொம்ப சிம்பிள்..
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க நயன்தாரா ‘இதை’ குடிப்பாராம்! என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ