ராமநாதபுரம் அடுத்த புத்தேந்தல் ரயில்வே தண்டவாளம் அருகே 40 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நான்கு பேரை ராமநாதபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையைத் தொடர்ந்து ராமநாதபுரத்திலும் ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் அரங்கேறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரத்தை அடுத்த புத்தேந்தல் பகுதியைச் சேர்ந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் இயற்கை உபாதையை கழிப்பதற்காக அங்குள்ள ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு ஒதுங்கியுள்ளார்.
மேலும் படிக்க | இனிமே No பேச்சு Only வீச்சு தான்..! களத்தில் குதித்த விஜய்..! மிரளும் அரசியல் களம்!
இதை அங்கு நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த, நான்கு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து அந்தப் பெண் கொடுத்த புகாரைத் தொடர்ந்து இச்சம்பம் தொடர்பாக ராமநாதபுரம் பி.ஒன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி புத்தேந்தல் பகுதியைச் சேர்ந்த புவனேஷ், முருகன், செல்வகுமார், குட்டி ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காதலனோடு தனியே இருந்த பெண்ணை ஞானசேகரன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பேரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கக்கூடிய நிலையில் ராமநாதபுரத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் பி1 காவல் நிலையத்துடன் இணைந்து அமைந்துள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஸ் தலைமையில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபகாலமாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அங்கு பயிலும் மாணவிக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டி எதிர்க்கட்சிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
மேலும் குறிப்பாக, கடந்த வாரம் ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடி விட்டு உடை மாற்றும் அறை அதாவது தனியாருக்கு சொந்தமான உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து படம் பிடித்த சம்பவத்தில் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில், இன்று ராமநாதபுரத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் பெண்கள் மத்தியில் பெரும் கலக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | மகளிர் உரிமை தொகையில் உயர்வு? பட்ஜெட்டில் வரவிருக்கும் மாஸான அறிவிப்பு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ