கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீச்சு! ஷிகாரிபூர் நகரில் 144 தடை உத்தரவு!

கர்நாடகா மாநிலம் ஷிகாரிபுராவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வீட்டின் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 27, 2023, 06:41 PM IST
  • பஞ்சாரா சமூகத்தினர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
  • போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
  • ஷிகாரிபூர் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீச்சு! ஷிகாரிபூர் நகரில் 144 தடை உத்தரவு! title=

கர்நாடகா மாநிலம் ஷிகாரிபுராவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வீட்டின் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. பஞ்சாரா சபாஜ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எடியூரப்பா வீட்டில் இருந்த பாஜக கொடியை அகற்றிவிட்டு பஞ்சாரா சமூகத்தினர் கொடியை ஏற்றினர்.

பழங்குடியின சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாரா சமூகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எஸ்சி பிரிவினருக்கிடையிலான உள் இடஒதுக்கீடு தொடர்பான ஏ.ஜே.சதாசிவா குழுவின் அறிக்கையை அமல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் மாநில அரசின் முடிவை எதிர்த்து பஞ்சாரா சமூகத்தினர் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.

அப்போது, பஞ்சாரா சமூகத்தினர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். எடியூரப்பாவின் வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதற்கிடையில், காவல் கண்காணிப்பாளர் ஜி கே மிதுன் குமார் நகருக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.

மேலும் படிக்க | அதிர்ச்சி! பள்ளியில் காண்டம், மதுபானம்... மாணவிகளின் வகுப்பு அருகே படுக்கையறை

இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் எடியூரப்பா மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மையின் உருவம் பொறித்த போஸ்டர்களை எரித்தனர். வன்முறையின் போது ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும், அமைதியை நிலை நாட்டவும் ஷிகாரிபூர் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ராகுல் காந்தி மீது இன்னும் 10 அவதூறு வழக்கு இருக்கு... ஆனால் அவரு ஒரு வழக்கு கூட தொடரவில்லை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News