போபால் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து; 4 குழந்தைகள் பரிதாப மரணம்

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள கமலா நேரு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட  தீ விபத்தில் 4 குழந்தைகள் தீயில் கருகி இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 9, 2021, 07:14 AM IST
போபால் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து; 4 குழந்தைகள் பரிதாப மரணம் title=

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள கமலா நேரு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட  தீ விபத்தில் 4 குழந்தைகள் தீயில் கருகி இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மருத்துவமனையின் குழந்தை வார்டில் தீ விபத்து ஏற்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது என்று ட்வீட் செய்துள்ளார். மீட்பு நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டது, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஏற்கனவே கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த மூன்று குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை. தீ விபத்தில் எத்தனை குழந்தைகள் காயமடைந்தனர் என்பது இன்னும் கூறப்படவில்லை என்றாலும், சில குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன.

மத்தியப் பிரதேச மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

ALSO READ | மரணத்திற்குப் பிறகு கைரேகை மாறுமா.. அறிவியல் கூறுவது என்ன..!!

முதல்வர் சிவ்ராஜ் சவுஹான் (Shivraj Chauhan), ‘குழந்தைகள் இறப்பு தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் கூறினார். இறந்த குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், கமலா நேரு மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்கும் பல குழந்தைகளின் பெற்றோர்கள், குழந்தைகளைப் பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை, 3-4 மணி நேரம் ஆகியுள்ளது. குழந்தைகள் வார்டில் தீ விபத்து ஏற்பட்டபோது சுமார் 150 குழந்தைகள் அந்த வார்டில் இருந்ததாக கூறுகின்றனர்.

முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இது குறித்து செய்துள்ள ட்விட்டர் பதிவில், சம்பவ இடத்தில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தினர் என்னுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும்  சக கேபினட் அமைச்சர் ஸ்ரீ விஸ்வாஸ் சாரங் அவர்கள் வந்து மீட்புப் பணிகளைக் கண்காணித்து வருகிறார். அனைவரும் பாதுகாப்பாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

கமலா நேரு மருத்துவமனை மத்திய பிரதேசத்தின் (Madhya Pradesh) தலைநகரான போபாலின் ஹமிடியா மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ளது. முன்னதாக பல குழந்தைகள் கட்டிடத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ALSO READ | பகீர் சம்பவம்! கழிப்பறைக்கு சென்ற நபரின் அந்தரங்க பகுதியை கடித்த பாம்பு..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News