மும்பை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து மும்பை "கேட்வே ஆஃப் இந்தியா" பகுதியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்பொழுது ஒரு பெண் "காஷ்மீர் ப்ரீ" (Free Kashmir) என்ற போஸ்டரை கையில் வைத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதுகுறித்த வீடியோ வெளிவந்துள்ளது. இந்த வீடியோவில், ஒரு பெண் "காஷ்மீர் ப்ரீ" என்ற போஸ்டர் வைத்திருப்பதை காணலாம். அதாவது ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370 வது பிரிவை இந்திய அரசு ரத்து செய்தது. இதன் மூலம், ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
இது தவிர, சர்ச்சைக்குரிய மற்றொரு போஸ்டரும் வெளிவந்துள்ளது. மும்பை வழக்கறிஞரான அபிஷேக் பட், "பெருமைமிக்க நகர்ப்புற நக்சல்" என்ற சுவரொட்டியுடன் கேட்வே ஆஃப் இந்தியாவில் போராட்டம் நடத்துகிறார்.
இந்த ஆர்ப்பாட்டம் ஜே.என்.யு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நடந்தது. அதே நேரத்தில், அரசியலமைப்புக்கு எதிராக போராட்டத்தின் போது ஒரு சர்ச்சைக்குரிய சுவரொட்டி காணப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி ஜே.என்.யுவில் நடந்த வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மும்பையிலும் ஒரு போராட்டம் நடைபெறுகிறது என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். கட்டண உயர்வு விவகாரத்தில் ஜே.என்.யுவின் இடதுசாரி மாணவர் பிரிவின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஜே.என்.யூ ஆசிரியர்கள் பொதுக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தனர். அப்போது முகத்தை துணியால் மறைத்தபடி கம்புகள், இரும்பு கம்பிகளுடன் நுழைந்த ஒரு கும்பல் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மாணவர்களை பயங்கரமாக தாக்கியுள்ள்ளனர். மாணவர்களை பயங்கரமாக தாக்கியுள்ளவர்கள் ஏ.பி.வி.பி.யை சேர்ந்த மாணவர்கள் என்று கூறப்படுகிறது.
#WATCH Mumbai: Poster reading, 'Free Kashmir' seen at Gateway of India, during protest against yesterday's violence at Delhi's Jawaharlal Nehru University. #Maharashtra pic.twitter.com/i7SeImYxCE
— ANI (@ANI) January 6, 2020
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறையில் சுமார் 20 மாணவர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) வன்முறையை நடத்தியதாக ஜேஎன்யூ மாணவர் சங்கம் கூறியிருந்தது. அதே நேரத்தில், இடதுசாரி தாக்குதல் நடத்தியதாக ஏபிவிபி குற்றம் சாட்டியுள்ளது. இதுக்குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.