சட்டப்பிரிவு 370 முதல் அயோத்தி தீர்ப்பு வரை மோடி அரசில் எடுக்கப்பட்டு 5 முக்கிய முடிவுகள் குறித்து நாம் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளோம்.
பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் 6 மாதங்களில் பல பெரிய முடிவுகளை எடுத்தார். பிரதமராக தனது வலுவான விருப்பத்தை அவர் இதன் மூலம் வெளிப்படுத்தி வருகின்றார். இதுவரையில் சுதந்திர இந்தியாவில் யாராலும் எடுக்க முடியாத சில முடிவுகளை மோடி அரசு எடுத்துள்ளது. அந்த வகையில் எடுக்கப்பட்ட மோடி அரசாங்கத்தின் 5 முடிவுகள் குறித்து நாம் இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
2019 மே மாதம் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மோடி தலைமையிலான அரசாங்கம் முதலில் பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றியது, மூன்று தலாக் முடிவுக்கு வந்தது. முஸ்லீம் பெண்களுக்கான அரசாங்கத்தின் பெரிய முடிவு அதுதான், பல ஆண்டுகளாக காத்திருந்த முடிவு அன்று நமக்கு கிடைத்தது. இந்த சட்டம் இயற்றப்பட்டவுடன் குறிப்பிட்ட 23 நாடுகளில் இந்தியா இணைந்துள்ளது.
மோடியின் இரண்டாவது ஆட்சி காலத்திலும் எடுக்கப்பட்ட மிகப்பெரிய முடிவு இது என கூறப்படுகிறது. ஆம்., ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370-வது பிரிவை நீக்குவது ஒரு பெரிய சவாலாக கருதப்பட்டது. எந்தொரு அரசாங்கமும் இந்த முடிவை எடுக்க தயங்கி வந்த நிலையில்., மோடி அரசு சட்டப்பிரிவு 370 தொடர்பான முடிவை அதிரடியாக எடுத்தது. மோடி அரசின் இந்த முடிவை அடுத்த ஜம்மு காஷ்மீர் கடும் பதற்றத்திற்கு உள்ளாகலாம் என கருதப்பட்டது. ஆனால் அனைவரது கருத்துகளையும் தவிடுபொடியாக்கி வெற்றிகரமாக ஜம்மு காஷ்மீரை இந்தியாவில் இணைத்தார் பிரதமர் மோடி.
மூன்றாவது முக்கியமான முடிவு... இந்தியாவில் தற்போஉ 28 மாநிலங்களும் ஒன்பது யூனியன் பிரதேசங்களும் இருப்பது. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டவுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களா பிரித்து உத்தரவு பிறப்பித்தார். அதன்படி ஐம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் புதிய இரு யூனியன் பிரதேசமாக சேர்க்கப்பட்டது. இதனையடுத்து இந்தியாவில் தற்போது 28 மாநிலங்களும், ஒன்பது யூனியம் பிரதேசங்களும் உருவாகியுள்ளது.
அரசாங்கத்தின் நான்காவது முடிவு ... இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கர்தார்பூர் சாஹிப் தாழ்வாரத்தைத் திறக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. பாகிஸ்தான், இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் ஏற்ப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது இந்த நடைபாதையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகள் இந்த நடைபாதையுடன் தொடர்புடையது. கர்த்தார்பூர் சாஹிப் சீக்கியர்களின் மிக முக்கியமான மத தளமாகும். 1947-இல் பிரிவினைக்குப் பிறகு, கர்த்தார்பூர் சாஹிப் குருத்வாரா பாகிஸ்தானுக்குச் சென்றது. அது முதல் இந்தியாவில் வசிக்கும் சீக்கியர்களுக்கு கர்த்தார்பூர் தாழ்வாரம் மிக முக்கிய வேண்டுகோளாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக, அரசாங்கத்தின் ஐந்தாவது முக்கியமான முடிவு... ராம் ஜன்மபூமி தகராறு குறித்து, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பின்னர் காணப்பட்டது. பல தசாப்பதங்களாக நீடித்து வந்த பிரச்சனைக்கு தற்போது முடிவு கிடைத்துள்ளது. இந்து - இஸ்லாமிய சகோதரர்களிடையே இந்த விவகாரம் மிகப்பெரிய பிளவு ஏற்படுத்தும் என யூகிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மத்திய அரசு சட்டம் ஒழுங்கை ஒரு சிறந்த வழியில் கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் வகுப்புவாத நல்லிணக்கத்தையும் அமைதியையும் பேணுவதில் வெற்றி பெற்றுள்ளது.