கவுரி லங்கேஷ் கொலைவழக்கு தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கையை சமர்பித்தது கர்நாடக அரசு.
கடந்த செப் 6-ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த, புகழ் பெற்ற எழுத்தாளர், பி.லங்கேஷ். அவரது மூத்த மகள், கவுரி லங்கேஷ். பல்வேறு பத்திரிகைகளிலும், கட்டுரைகள் எழுதி வந்த அவர், கன்னட மொழியில் வெளியாகும், 'லங்கேஷ் பத்திரிகே' பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்து வந்தார்.
பெங்களூருவின் ராஜ ராஜேஸ்வரி நகரில், தன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் கவுரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடி விட்டனர்.
முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டது. மேலும் வழக்கு தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறு கர்நாடக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டிருந்தது.
இந்நிலையில் இன்று கவுரி லங்கேஷ் கொலைவழக்கு தொடர்பாக கர்நாடக அரசு உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.