Gold Rates Today: நிலைகொள்ளாமல் தத்தளிக்கும் தங்க விலையில் மீன் பிடிக்கும் காலம் இதுதான்

கடந்த இரண்டு-மூன்று மாதங்களில் தங்கத்தின் விலை நிலையில்லாமல்தான் இருந்தது. பிப்ரவரியில் விலை சற்று உயர்ந்து மார்ச் மாதத்தில் வீழ்ச்சியைக் கண்டது. ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 8, 2021, 01:02 PM IST
  • தங்கத்தின் விலை இன்று 100 கிராமிற்கு 1,000 ரூபாய் அதிகரித்தது.
  • தேசிய அளவில், 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .44,300 ஆகவும் 100 கிராமுக்கு ரூ .4,43,00 ஆகவும் உள்ளது.
  • செய்கூலி மற்றும் சேதாரம் ஆகியவற்றைப் பொறுத்தும் நகைக்கடைகளில் விலைகள் மாறுபடலாம்.
Gold Rates Today: நிலைகொள்ளாமல் தத்தளிக்கும் தங்க விலையில் மீன் பிடிக்கும் காலம் இதுதான்  title=

Gold Rates Today: தங்கத்தின் விலை இன்று 100 கிராமிற்கு 1,000 ரூபாய் அதிகரித்தது. கடந்த இரண்டு-மூன்று மாதங்களில் தங்கத்தின் விலை நிலையில்லாமல்தான் இருந்தது. பிப்ரவரியில் விலை சற்று உயர்ந்து மார்ச் மாதத்தில் வீழ்ச்சியைக் கண்டது. ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.

தேசிய அளவில், 22 காரட் தங்கத்தின் விலை (Gold Price) 10 கிராமுக்கு ரூ .44,300 ஆகவும் 100 கிராமுக்கு ரூ .4,43,00 ஆகவும் உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .45,300 ஆகவும் 100 கிராமுக்கு ரூ .4,53,000 ஆகவும் உள்ளது.

சென்னை, மும்பை, டெல்லி, பிற நகரங்களில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் 

வரி மற்றும் பிற காரணிகளால் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்கள் மற்றும் மாநிலங்களில் தங்கத்தின் விலை வேறுபடுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மும்பையில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை ரூ .44,300 ஆக உள்ளது. டெல்லியில் இது ரூ .44,800 ஆகவும் பெங்களூருவில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .42,650 ஆகவும், சென்னையில் தங்கத்தின் விலை இன்று ரூ .42,970 ஆகவும் உள்ளது. உத்தரபிரதேசத்தின் லக்னோவில், 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .44,800 ஆக உள்ளது.

ALSO READ: Gold Silver Rates Today: தங்க விலையில் தேக்கம், விரைந்து வாங்கினால் லாபம்!

மும்பையில், 24 காரட் தங்கத்தின் (Gold) விலை இன்று ரூ .45,300 ஆக உள்ளது. டெல்லியில் இதன் விலை ரூ .48,870 ஆகவும், பெங்களூரில் 24 காரட் தங்கத்தின் விலை ரூ .46,530 ஆகவும் உள்ளது. சென்னையில், இன்று 24 காரட் தங்கத்தின் விலை ரூ .46,890 ஆகவும், லக்னோவில், 10 கிராம் விலை 24 காரட் தங்கத்தின் விலை ரூ .48,870 ஆகவும் உள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள 22 காரட் மற்றும் 24 காரட் தங்கத்தின் விலையில், சரக்கு மற்றும் சேவை வரி (GST), TCS மற்றும் பிற வரிகள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செய்கூலி மற்றும் சேதாரம் ஆகியவற்றைப் பொறுத்தும் நகைக்கடைகளில் விலைகள் மாறுபடலாம்.

ALSO READ: இனி தங்கத்தின் தூய்மை பற்றிய கவலை வேண்டாம்: BIS Care Mobile App உங்களுக்கு உதவும்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News