Pressure Cooker-ல் தங்கம்: Viral ஆகும் கேரளாவின் தங்கக் கடத்தல் படங்கள்!!

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகம் முழுவதும் போராடி வருகிறது. ஆனால் இவை எதைப் பற்றியும் கவலைப்படாத சிலரும் இருக்கிறார்கள்.

Last Updated : Sep 5, 2020, 06:42 PM IST
  • கடத்தலுக்கான புதிய வழிகள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
  • சமீபத்தில் கேரளாவின் காலிகட் சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் குக்கரில் தங்கத்தைக் கடத்தியது கண்டறியப்பட்டது.
  • சில நாட்களுக்கு முன்பு, சோப்பில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவமும் மிகவும் விவாதிக்கப்பட்டது.
Pressure Cooker-ல் தங்கம்: Viral ஆகும் கேரளாவின் தங்கக் கடத்தல் படங்கள்!! title=

புதுடெல்லி: கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோயால் உலகம் முழுவதும் போராடி வருகிறது. ஆனால் இவை எதைப் பற்றியும் கவலைப்படாத சிலரும் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த உலகிலேயே மூழ்கி இருக்கிறார்கள்.

தங்களது தவறான செயல்களை அவர்கள் இந்த காலத்திலும் திருத்திக் கொள்ளவில்லை. கொரோனா காலத்திலும் கூட, உலகில் கடத்தல் (Smuggling) குறித்த வழக்குகள் நிற்பதாகத் தெரியவில்லை. அதை விட ஆச்சரியம் என்னவென்றால், கடத்தலுக்கான புதிய வழிகள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், இதுபோன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் (Social Media) வைரலாகி வருகிறது. இதில் கடத்தல்காரரின் புத்தி சாதுர்யம் உங்களை கண்டிப்பாக ஆச்சரியப்படுத்தும்.

இந்த நேரத்தில், தங்கத்தின் விலை வானத்தைத் தொடும் அளவில் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், தங்கம் கடத்தப்படுவதும் (Gold Smuggling) அதிகரித்துள்ளது. தங்கக் கடத்தலின் அப்படிப்பட்ட ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இங்கு தங்கம் கடத்தப்படும் விதம் கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும். ஒவ்வொருவரின் வீட்டிலும் பிரஷர் குக்கர் (Pressure Cooker) இருக்கும். அதில் நாம் பருப்பு வகைகள், அரிசி போன்றவற்றை சமைப்போம். சிலர் இதில் எப்போதாவது கேக் போன்ற உணவுப் பண்டங்களையும் செய்வதுண்டு. ஆனால் ஜெட்டாவின் (Jeddah) இந்த நபர் குக்கரை வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தியுள்ளார். இப்போது பிரஷர் குக்கர் தங்கத்தை கடத்த பயன்படுத்தப்படுகிறது.

ALSO READ: Watch Video: உங்க ஆர்வக்கோளாறுக்கு ஒரு அளவே இல்லையா என வியக்க வைக்கும் பார்பர்!!

சமீபத்தில் கேரளாவின் காலிகட் (Calicut International Airport) சர்வதேச விமான நிலையத்தில் ஜெடாவைச் சேர்ந்த ஒருவரிடம் ஒரு பிரஷர் குக்கர் இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையின் போது, ​​அந்த குக்கரிலிருந்து தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இதைக் கண்டு புலனாய்வாளர்கள் முதல் அங்கு வந்த பயணிகள் வரை அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நபர் குக்கரின் கனமான அடி அடுக்கை வெளியே எடுத்து 700 கிராம் தங்கத்தை அதன் கீழ் மறைத்து வைத்திருந்தார். விசாரணையில் சந்தேகம் எழவே ​​ஒரு முழுமையான தேடல் நடத்தப்பட்டது. பின்னர் குக்கரிலிருந்து அதிக அளவிலான தங்கம் மீட்கப்பட்டது.

கடத்தப்பட்ட தங்கம் மீட்கப்பட்டு, தற்போது அந்த நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, ஒரு விமான நிலையத்திலிருந்து சோப்பில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவமும் மிகவும் விவாதிக்கப்பட்டது.

ALSO READ: WATCH: ஹிந்தி பாடலுக்கு நடுரோட்டில் நடனமாடி பட்டைய கிளப்பிய பாட்டிகள்...

Trending News