குஜராத் மாநிலத்தில் 2-வது கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெறுகிறது. 93 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குஜராத் சட்டசபைக்கான 182 தொகுதிகளில் 89 இடங்களில் கடந்த டிசம்பர் 9-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அந்த வகையில் இன்று 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இன்று நடக்க இருக்கும் குஜராத் மாநில 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 851 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் குஜராத் சட்டசபை தேர்தலின் இறுதி கட்டமாக பிரதமர், ராகுல் ஆகியோர் டிவிட்டரில் அம்மாநில மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரதமர் மோடி டிவீட்:-
Today is Phase 2 of the Gujarat elections. I request all those voting today to vote in record numbers and enrich this festival of democracy.
— Narendra Modi (@narendramodi) December 14, 2017
ராகுல்காந்தி டிவீட்:-
गुजरात में नवसर्जन की शुरुआत हो चुकी है। आपका एक एक वोट लोकतंत्र की नींव को सुदृढ़ और सशक्त बनाएगा। गुजरात की जनता से अपील है कि गुजरात के उज्जवल भविष्य के लिए अधिक से अधिक वोट करें। #NavsarjanGujarat
— Office of RG (@OfficeOfRG) December 14, 2017