LKG மாணவர்களின் வாயில் செல்லோடேப் ஒட்டிய பள்ளி ஆசிரியர், இடைநீக்கம் செய்யப்பட்டார்....
அரியானா: குருகிராமில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் தான் பாடம் எடுக்கும் பொது LKG குழந்தை பேசி கொண்டிருந்த இரண்டு குழந்தைகளைஅமைதிபடுத்த குழந்தையின் வாயில் செல்லோடேப் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வானது பள்ளி வகுப்பறையில் போருத்தபட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளன. இதை தொடர்ந்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் LKG வகுப்பு படிக்கும் நான்கு வயதுடைய இரண்டு மாணவர்களின் வாயில் ஆசிரியர் செல்லோடேப் ஒட்டியுள்ளார். அதில் ஒருவர் பெண், மற்றொருவர் ஆண்.
இதை தொடர்ந்து, ஆசிரியரின் நடவடிக்கை குறித்து இரண்டு சிறுவர்களும் தங்களின் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர். அதன்பிறகு சனிக்கிழமை பள்ளி நிர்வாகத்தால் அந்த ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் இது குறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், "மாணவர்களின் பெற்றோரின் புகாரில், நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுத்தோம், ஆசிரியை தற்காலிகமாக நிறுத்திவிட்டோம்," என பள்ளி ஆசிரியரான குருராஜ் தெரிவித்தார்.
இதற்கிடையில், அந்த மாணவர் மொத்த வர்க்கத்தை குழப்பமடையச் செய்ததாகக் கூறினார். நான்கு வயதானவர்கள் சில நேரங்களில் "இழிவான மொழியை" பயன்படுத்தினர் என்று குற்றம் சாட்டினார்.