பஞ்சாப் மாநில தேர்தலில் முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. அம்மாநில முதலமைச்சராக பகவந்த் சிங் மான் நேற்று பொறுப் பேற்றுக்கொண்டார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 5 இடங்கள் மாநிலங்களவையில் காலியாக உள்ளதால் அதில் ஹர்பஜன் சிங் ஒருவராக தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜக 4 மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது. பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது. அதுவும் 117 இடங்களில் 92 இடங்களைப் பிடித்து இமாலய வெற்றி பெற்றது. அதன்பிறகு முதலமைச்சராக பகவந்த் சிங் மான் பதவியேற்றுக் கொண்டார். அவர் வழக்கமாக ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக்கு பதிலாக, தனது சொந்த கிராமமான கட்கர்கலானில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில் ஆம் ஆத்மி தலைவர்கள், கிராமத்தினர் உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Congratulations to @AamAadmiParty and My friend #BhagwantMann on Becoming our New Chief minister .. great to hear that he will be taking oath as the new CM in Bhagat Singh's village Khatkarkalan, what a picture…this is a proud moment for Mata ji pic.twitter.com/k46DNr6Pjz
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 10, 2022
இந்நிலையில் பகவ்ந்த் சிங் பதவியேற்பு குறித்து பதிவிட்டிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், “ஆம் ஆத்மி கட்சிக்கு மற்றும் புதிய முதலமைச்சரான எனது நண்பர் பகவந்த் சிங் மானுக்கும் எனது வாழ்த்துக்கள். சொந்த கிராமமான கட்கர்கலானில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதை கேட்பதில் மகிழ்ச்சி. என்ன ஒரு புகைப்படம். அம்மாவுக்கு பெருமையான தருணம்.” என்று எழுதியுள்ளார்.
மேலும் படிக்க | தமிழக பட்ஜெட் எதிர்ப்பார்ப்புகள் என்ன? மின்கட்டணம் உயர்த்தப்படுமா?
இந்த பதிவை அடுத்து ஹர்பஜன் சிங் விரைவில் ஆம் ஆத்மி கட்சியில் இணைய உள்ளதாகவும், அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பஞ்சாப் மாநிலத்துக்காக மாநிலங்களவையில் 5 இடங்கள் காலியாக உள்ளன. அந்த 5 இடங்களில் ஒரு இடத்துக்கு ஹர்பஜன் சிங் தேர்வாகலாம். ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நிலையில், தற்போது ஹர்பஜனும் தேர்வாக உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்து மக்களவை எம்.பியாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR