தேர்தல் வருகிறது!! ரூ.4700 கோடி விவசாயகடனை தள்ளுபடி செய்தது ஹரியானா அரசு

சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, பாஜக தலைமையிலான ஹரியானா அரசு கூட்டுறவு வங்கிகளிடமிருந்து வாங்கப்பட்ட ரூ.4,750 கோடி விவசாயகடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 2, 2019, 05:08 PM IST
தேர்தல் வருகிறது!! ரூ.4700 கோடி விவசாயகடனை தள்ளுபடி செய்தது ஹரியானா அரசு title=

பிவானி: சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, பாஜக தலைமையிலான ஹரியானா அரசு கூட்டுறவு வங்கிகளிடமிருந்து வாங்கப்பட்ட ரூ.4,750 கோடி விவசாயகடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் சுமார் 10 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஹரியானா சட்டமன்றத் தேர்தல் (Haryana Assembly Election 2019) நடைபெற உள்ளதால், தேர்தலுக்கு முன்னரே விவசாயிகளுக்கு (Farmers) ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் (Manohar Lal Khattar).

பிவானி மாவட்டத்தில் ஜன் ஆஷிர்வாத் யாத்திரையில் கலந்துக்கொண்ட முதல்வர் கட்டார் கூறுகையில், விவசாயிகளுக்காக மொத்தம் ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவில் சலுகைகளை அறிவித்துள்ளோம். இந்த சலுகை மூலம் விவசாயிகளுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும். இதனால் சுமார் 10 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று கூறினார். 

அதாவது விவசாயிகள் இனி வட்டி மற்றும் அபராதங்களை செலுத்த வேண்டியதில்லை. விவசாயிகள் பயிர்க்கடனின் அசல் தொகையை மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். ரூ.5 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கிய விவசாயிகள் இப்போது 12-15 சதவீத வட்டிக்கு பதிலாக இரண்டு சதவீத வட்டியை மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும் என்று முதல்வர் கட்டர் கூறினார்.

Trending News