ஹரியானா வன்முறை.... மயிரிழையில் உயிர் தப்பிய ஹரியானா நீதிபதியும் அவரது மகளும்!

நூஹ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், திங்களன்று ACJM அஞ்சலி ஜெயின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கற்களை வீசி தாக்கினர் என கூறப்பட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 3, 2023, 09:19 AM IST
  • பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் இருந்து இழப்பீடு பெறப்படும்.
  • அனைத்து பிரிவினரும் அமைதி காக்க வேண்டும் என்று ஹரியானா முதல்வர் வேண்டுகோள்
  • கலவரக்காரர்கள் அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஹரியானா வன்முறை.... மயிரிழையில் உயிர் தப்பிய ஹரியானா நீதிபதியும் அவரது மகளும்! title=

ஹரியானாவின் நூஹ் நகரில் விஷ்வ ஹிந்து பரிஷத் யாத்திரை மீது வன்முறை கும்பல் தாக்குதலை நடத்திய போது, ​​கலவரக்காரர்கள் நூஹ்வி நகரின் கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டின் வாகனத்தைத் தாக்கி தீ வைத்தனர். இந்த தாக்குதலில் நீதிபதியும் அவரது மூன்று வயது மகளும் எப்படியோ காயமின்றி மயிரிழையில் உயிர் தப்பினர். முதல் தகவல் அறிக்கையில் இது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. 

நூஹ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், திங்களன்று ACJM அஞ்சலி ஜெயின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கற்களை வீசி தாக்கினர் என கூறப்பட்டுள்ளது. இதனால், உயிரைக் காப்பாற்றிக் கொண்டு அவரும் அவரது மகளும் ஓட வேண்டியதாயிற்று. நீதிபதி, அவரது மகள் மற்றும் ஊழியர்கள் நூஹில் உள்ள பழைய பேருந்து நிலையத்தின் பணிமனையில் தஞ்சம் அடைய வேண்டியிருந்தது

முதல் தகவல் அறிக்கை  FIR பதிவு 

நீதிபதி, அவரது மகள் மற்றும் ஊழியர்கள் நூஹில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு பணிமனையில் தஞ்சம் அடைய வேண்டியிருந்தது, பின்னர் சில வழக்கறிஞர்களால் அது மீட்கப்பட்டது. நுஹ் ACJM நீதிமன்றத்தின் ஊழியர் டெக்சந்த் என்பவரின் புகாரின் அடையாளம் தெரியாத நபர்கள் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை

ஹரியானாவில் வன்முறையில் 6 பேர் பலியாகியுள்ளனர். இந்த வழக்கில் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம் பல நகரங்களில் ஆகஸ்ட் 5ம் தேதி நள்ளிரவு வரை இணையதள தடை தொடரும். ஹரியானாவின் பல நகரங்களில் நடந்த வன்முறைக்குப் பிறகு, முதல்வர் மனோகர்லால் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். வன்முறை சம்பவங்களில் இதுவரை 44 FIR என்னும் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 90 பேர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் கட்டார் விடுத்துள்ள எச்சரிக்கை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் இருந்து இழப்பீடு பெறப்படும் என முதல்வர் மனோகர் லால் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், வன்முறை வெடித்ததையடுத்து, ஹரியானாவின் 9 மாவட்டங்களில் 144 தடைச் சட்டம் அமலில் உள்ளது. இன்னும் பல நகரங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. நூஹ், ஃபரிதாபாத், பல்வால் மற்றும் ஹரியானாவின் மானேசர் மற்றும் சோஹ்னா, பட்டோடி ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 5ஆம் தேதி நள்ளிரவு வரை இணைய சேவை தடை செய்யப்படும். இதற்கிடையில், அனைத்து பிரிவினரும் அமைதி காக்க வேண்டும் என்று ஹரியானா முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாக்குதல் குறித்த விவரங்கள்

FIR அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவலில், திங்கள்கிழமை மதியம் 1 மணியளவில், ACJM, அவரது மூன்று வயது மகள்  நல்ஹரில் உள்ள SKM மருத்துவக் கல்லூரிக்கு தனது ஃபோக்ஸ்வேகன் காரில் மருந்துகளை வாங்கச் சென்றனர். மதியம் 2 மணியளவில் அவர்கள் மருத்துவக் கல்லூரியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, டெல்லி-ஆல்வார் சாலையில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே சுமார் 100-150 கலவரக்காரர்கள் அவர்களைத் தாக்கினர்.

மேலும் படிக்க | ரயிலில் 4 பேரை சுட்டுக்கொன்ற போலீஸின் பகீர் வீடியோ!

"கலவரக்காரர்கள் அவர்கள் மீது கற்களை வீசிக்கொண்டிருந்தனர். சில கற்கள் காரின் பின் கண்ணாடி மீது மோதின. கலவரக்காரர்கள் அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். நாங்கள் நான்கு பேரும் காரை சாலையில் விட்டு விட்டு எங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினோம். நாங்கள் ஒரு பணிமணியில் ஒளிந்து கொண்டோம். பழைய பேருந்து நிலையம் மற்றும் பின்னர் சில வழக்கறிஞர்கள் எங்களைக் காப்பாற்றினர். மறுநாள், நான் காரைச் சோதனை செய்யச் சென்றபோது, கலவரக்காரர்கள் அதை எரித்ததை அறிந்தேன்" என்று முதல் தக்வல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வன்முறை சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 148 (கலவரங்கள்), 149 (சட்டவிரோதமான கூட்டம்), 435 (சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தீ), 307 (கொலை முயற்சி) மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக விஸ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலத்தின் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து நடந்த மோதலில் இரண்டு ஊர்க்காவல் படையினர் மற்றும் ஒரு ஆன்மீக குரு உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மாணவியின் வாட்டர் பாட்டிலில் சிறுநீர் கலந்த மாணவர்கள்! சமூக பிரச்சனையாக மாறிய சம்பவம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News